Home செய்திகள் தேசிய செய்திகள் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது

புதுடெல்லி: மார்ச் 10-
ஈ​ரான் போர் காரண​மாக கச்சா எண்​ணெய்க்கு தட்டுப்​பாடு ஏற்​பட்​டு, ஒரு பேரலின் விலை 100 டாலரை தாண்டியது.
அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரு​கிறது. சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார் உள்​ளிட்ட நாடு​களின் எண்​ணெய் வயல்​கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதன்​ காரண​மாக பெரும்​பாலான எண்​ணெய் வயல்​கள் மூடப்​பட்டு உள்​ளன.
மேலும் ஹார்​முஸ் வளை​கு​டா​வில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முழு​மை​யாக முடக்கி உள்​ளது. இந்த வளை​குடா வழி​யாக உலகின் 25% கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து நடைபெறுகிறது. மத்​திய கிழக்கு நாடு​களின் கச்சா எண்​ணெய் போக்கு​வரத்து முடங்​கி​யிருப்​ப​தால் அதன் விலை கணிச​மாக அதிகரித்து வரு​கிறது. ஈரான் போருக்கு முன்​பாக ஒரு பேரல் (159 லிட்டர்) கச்சா எண்​ணெய் விலை 65 டாலர் முதல் 70 டால​ராக இருந்தது.
போருக்கு பிறகு படிப்​படி​யாக விலை அதி​கரித்து வரு​கிறது. நேற்று காலையில் ஒரு பேரல் பிரன்ட் கச்சா எண்​ணெய் 120 டாலரை எட்​டியது. பின்னர் படிப்படியாகக் குறைந்து 100 டாலரை ஒட்டி வர்த்தகமானது. சீனா, பாகிஸ்​தான், வங்​கதேசம் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்டு உள்ளது. ஐரோப்​பிய நாடு​களி​லும் கச்சா எண்​ணெய், இயற்கை எரிவாயுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. குறிப்​பாக பிரிட்டனில் 2 நாட்​களுக்கு தேவை​யான இயற்கை எரி​வாயு மட்டுமே இருப்​ப​தாக அந்த நாட்டு அரசு தெரி​வித்​துள்​ளது. இந்த சூழலில் பெட்​ரோல், டீசல் பற்​றாக்​குறையை சமாளிக்க இந்தி​யா​வின் உதவியை உலக நாடு​கள் நாடி உள்​ளன. அமெரிக்கா, ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் பொருளா​தார தடை காரண​மாக ரஷ்யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​திய பொதுத்துறை, தனி​யார் நிறு​வனங்​கள் படிப்​படி​யாக குறைத்து வந்​தன. தற்​போதைய சூழலில் ரஷ்​யா​விடம் இருந்து இந்திய நிறு​வனங்​கள் மீண்​டும் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்​குமதி செய்து வரு​கின்​றன.