
டெஹரோன்: மார்ச் 9-
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியுள்ளன. ஈரான் படைகள் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை கைப்பற்றி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெரிதும் தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சேமிக்க இடம் இல்லாமல் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. ஈரான் மீதான போர் தற்போது உலக எண்ணெய் சந்தையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இதன் வாயிலாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் விலை 116 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது. இதன் வளைகுடா நாடுகளின் நிதி ஆதாரத்தை குறைப்பது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு கச்சா எண்ணெய்யை நம்பியிருக்கும் உலக நாடுகளுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. ஓபெக் அமைப்பின் ஐந்தாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் குவைத், சனிக்கிழமை ஈரானின் ஹார்முஸ் அச்சுறுத்தலால் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு அளவை குறைத்ததாக அறிவித்தது. இதேபோல் ஓபெக் அமைப்பின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் ஈராக் அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி 70 சதவீதம் குறைந்து 1.3 மில்லியன் பேரல்களாக சரிந்துள்ளது. முன்பு 4.3 மில்லியன் பேரல்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


















