Home செய்திகள் உலக செய்திகள் கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!

கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!

தோஹா, மார்ச் 21 – வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர்ச்​சி​யாக ஏவு​கணைகளை வீசி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக,
கத்​தா​ரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்​ஜி) ஏற்​றும​தித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இதனால் ஆண்​டுக்கு சுமார் 20 பில்​லியன் டாலர் வரு​வாய் இழப்பு ஏற்​படும் என கத்​தார் எனர்ஜி நிறு​வனத்​தின் தலைமைச் செயல் அதி​காரி​யும்,
அந்​நாட்​டின் எரிசக்தித்துறை அமைச்​சரு​மான சாத் அல்​-​காபி தெரிவித்துள்​ளார். இது குறித்து அவர் ராய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனத்​திடம் கூறிய​தாவது:
ஒரு சகோதர முஸ்​லிம் நாடான ஈரானிட​மிருந்​து, அது​வும் இந்த புனித​மான ரமலான் மாதத்​தில் இத்​தகைய வேதனை மிகுந்த தாக்​குதலை நாங்​கள் எதிர்​பார்க்​கவே இல்​லை. இது ஒட்​டுமொத்த பிராந்​தி​யத்​தின் பாது​காப்​பை​யும் கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது.
போர் நிறுத்​தம் ஏற்​பட்​டால் மட்​டுமே மீண்​டும் உற்​பத்​தி​யைத் தொடங்க முடி​யும். இந்​தத் தாக்​குதலில் கத்​தா​ரில் சேதமடைந்த கட்​டமைப்​பு​களைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்​டு​கள் வரை ஆகும். இதனால் ஆண்​டுக்கு 12.8 மில்​லியன் டன் எரி​வாயு விநி​யோகம் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.
இது சீனா, இந்​தியா உள்​ளிட்ட ஆசிய நாடு​களுக்​கும், ஐரோப்​பிய நாடு​களுக்​கும் பெரும் எரிசக்தி தட்​டுப்​பாட்டை உரு​வாக்​கும் என அஞ்​சப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.