Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

பெங்களூரு: மார்ச் 9 –
பட்​டியலின உள் ஒதுக்​கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்​களின் கல்​வி, வேலை வாய்ப்பு பறிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.
கர்​நாடக மாநில அரசு பட்​டியலில் உள்ள 101 சாதி​களை எஸ்​சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி – சி ஆகிய 3 பிரிவு​களாக பிரித்​துள்ளது. மொத்​த​முள்ள 17 சதவீத இட ஒதுக்​கீட்​டில் எஸ்சி – ஏ 6 சதவீதம், எஸ்சி – பி 6 சதவீதம், எஸ்சி – சி 5 சதவீதம் உள் இட ஒதுக்​கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 புள்​ளி​களைக் கொண்ட இன சுழற்சி முறை​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.
இதில் எஸ்சி – ஏ பிரி​வினருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் முதல் இடம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், எஸ்சி – பி பிரிவுக்கு 14 இடமும், எஸ்சி – சி பிரிவுக்கு 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்​பித்​துள்​ளது.
அரசின் இந்த முடி​வால் எஸ்சி பி மற்​றும் எஸ்சி சி பிரி​வில் உள்ள 70-க்​கும் மேற்​பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்​டிய கல்​வி, வேலை வாய்ப்பு இடங்​கள் பறி போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எஸ்சி பி பிரி​வில் இடம் பெற்​றுள்ள‌ தமிழ்ப் பேசும் ஆதி திரா​விடர், பறையர், வள்​ளுவர், சாம்​பவர் உள்​ளிட்ட சாதி​யினர் பாதிக்​கப்​படு​வ​தால், அம்​மக்​கள் கோபம் அடைந்​துள்​ளனர்.
கர்​நாடக அரசின் முடிவை கண்டித்து மைசூரு​வில் பல்​கலைக்கழக பாபா​சாகேப் அம்​பேத்​கர் மாணவ அமைப்​பினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். ஷிமோ​கா​வில் உள்ள ஆதி திரா​விடர் அமைப்​பினர் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
இது குறித்து ஆதி​ திரா​விட மகாஜன சபை​யின் மூத்த தலை​வர் கோ.தேசிகன்பிள்ளை கூறுகையில், “தமிழ்​நாட்​டில் அருந்ததியினருக்கு வழங்​கப்​பட்ட முன்​னுரிமை​யுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்​கீட்​டால் அங்​குள்ள பறையர் உள்​ளிட்ட 76 சாதியினர் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.தற்​போது கர்​நாடக அரசு முடி​வால் இங்​குள்ள எஸ்​சி- பி பிரி​வில் உள்ள சுமார் 1.5 கோடி​யினருக்கு கல்​வி, வேலை​வாய்ப்​பில் பெரும் பாதகம் ஏற்படும்.
அதி​லும் குறிப்​பாக தமிழ் ஆதி ​தி​ரா​விடர்​கள் கர்​நாடகா முழு​வதும் சுமார் 60 லட்​சம் பேருக்கு உயர் கல்வி நிலை​யங்​களில் கற்கும் உரிமை​யும், ஊக்க தொகை​யும், அரசு வேலை வாய்ப்​பும் கிடைக்​காமல் போகும். கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றத்திலும் இட ஒதுக்​கீட்டு முறைக்கு எதி​ராக வழக்கு தொடரப்பட்​டுள்​ளது. சித்தராமையா தலை​மையி​லான காங்​கிரஸ் அரசு இதனை திரும்ப பெறா​விட்​டால், வரு​கிற தேர்​தலில் கடும் பின் விளைவை சந்​திக்க நேரிடும்​“ என்​றார்.