Home செய்திகள் தேசிய செய்திகள் காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்​டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை

காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்​டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி, ஜூலை 1- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அறக்கட்டளை நிர்​வாகி​கள் சம்​பக் ராய், அணில் மிஸ்​ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவி​களை ராஜி​னாமா செய்​தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்​துள்ள அயோத்தி காவல் துறையினர், அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பக் ராயிடம் சுமார் 3 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, “காணிக்கை திருட்டு விவ​காரத்​தில் எனக்கு எந்​தப் பங்​கும் இல்லை. டின்னு (எ) ராம் ஷங்​கர் யாதவ் இப்​படி செய்​வார் என எதிர்​பார்க்​க​வில்​லை. இந்த தகவல் கிடைத்​தவுடன் நான்​தான் உடனடி​யாக நடவடிக்கை எடுக்க உ.பி. அரசுக்கு கடிதம் எழு​தினேன்.
எனினும், காணிக்கை விஷ​யத்​தில் முறை​கேடு நடக்காமல் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டியது எனது பொறுப்பு” என்று சம்​பக் தெரி​வித்​துள்​ளார். இதற்​கிடை​யில், ராமர் கோயில் சிசிடிவி கேம​ராக்​களைக் கண்காணிக்க அர்​ஜுன் தேவ் என்ற அதி​காரியை உ.பி. அரசு நியமித்திருந்​தது. இவர் ராமர் கோயில் கட்​டு​வதற்கு முன்​பாக 2009 முதல் ரேடியோ பராமரிப்பு அதி​காரி​யாகப் பணி​யாற்றி வருகிறார். இவரை பணி​மாற்​றம் செய்ய விடா​மல் அறக்​கட்​டளை தடுத்​துள்​ளது தெரிய வந்​துள்​ளது. ஆனால், காணிக்கை திருட்டு புகார் எழுந்​தவுடன் சில நாட்​களுக்கு முன்பு லக்​னோவுக்​குப் பணிமாற்​றம் செய்​யப்​பட்​டார். எனினும்,
அவரை அயோத்​திக்கு வரவழைத்து விசா​ரிக்க போலீஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர். கோயி​லில் அமைக்​கப்​பட்​டிருந்த சுமார் 1,600 சிசிடிவி கேம​ராக்​கள், அர்​ஜுன் தேவின் பொறுப்​பில் இருந்​துள்​ளன.
திருட்டு நடப்​பது தெரிந்​தும் இவர் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் புகார் அளிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்​துடன் கேமரா பதிவு​களை​யும் அவர் சேமிக்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், முக்​கிய குற்​ற​வாளி டின்னு யாதவுடன் அர்​ஜுன் தேவ் நெருக்​க​மான நட்​புடன் இருந்​துள்​ளார். இதே வழக்​கில் ராமர் கோயி​லில் தனி​யார் பாது​காப்​புப் பணியாளர்​களில் 400 பேரும் போலீ​ஸார் கண்​காணிப்​பில் உள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் சர்​வ​தேசத் தலை​வர் அலோக் குமார் மீண்டும் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறிய​தாவது: காணிக்கை திருட்டு வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் அனைவரும் சட்​டப்​படி தண்​டிக்​கப்பட வேண்​டும். அதேநேரம் குற்றம்சாட்​டப் ​பட்​ட​வர்​களுக்​காக வாதாட மாட்டோம் என்ற அயோத்தி வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் முடிவை நான் ஆதரிக்கவில்​லை. இதுபோன்ற செயல் அரசி​யலமைப்​புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறி​வித்​துள்​ளது. எனவே, அயோத்தி வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் முடிவு அரசியலமைப்​புக்கு முரணானது. அவர்​கள்​ தங்​கள்​ முடிவை மறுபரிசீலனை செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்ளார்​.