Home செய்திகள் தேசிய செய்திகள் காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் காட்டிய மோப்ப நாய் ‘டைசன்’

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் காட்டிய மோப்ப நாய் ‘டைசன்’

புதுடெல்லி, பிப். 24- ஜம்​மு​வின் கீஷ்த்​வார் பகு​தி​யில் நேற்று முன்​தினம், மத்​தி​யப் பாது​காப்​புப் படை​யினர் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அவர்​களு​டன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவா​தி​களின் இருப்​பிடத்தை நோக்கி குரைத்​துள்​ளது. இதையடுத்​து, டைசனை தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்​தம் கொட்​டிய​போதும் டைசன் தொடர்ந்து குரைத்​துள்​ளது. இதையடுத்து பாதுகாப்புப்படை​யினர் தொடங்​கிய நடவடிக்​கை​யில் 3 தீவிரவாதி​களும் சுட்டு வீழ்த்​தப்​பட்​டனர்.தீவிர​வா​தி​களின் மறை​விடத்​தைக் கண்​டு​பிடித்த ஜெர்​மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த நடவடிக்​கை​யின் நாயக​னாகக் கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில், காயமடைந்த டைசனுக்கு உதம்​பூரில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டைசனைப் போல், பல மோப்ப நாய்​கள் தீவிரவா​தி​களை அடை​யாளம் காண்​ப​தில் உதவி உள்​ளன.
கடந்த 2024-ம் ஆண்​டில் காஷ்மீரின் அக்​னூர் செக்​டரில் ’பாண்​டம்’ எனும் மோப்ப நாய் காணா​மல் போனது. 4 தினங்​களுக்கு பின் திரும்​பியப் பாண்​டம், தீவிர​வா​தி​களின் மறை​விடத்​தைக் கண்​டு​பிடித்​தது. பிறகு அங்கு பாது​காப்​புப் படை​யினர் சென்று தீவிரவாதி​களைக் சுட்டு வீழ்த்​தினர்