Home விளையாட்டு குஜராத் கேப்டன் ஷுப்​மன் கில் விளக்கம்

குஜராத் கேப்டன் ஷுப்​மன் கில் விளக்கம்

புதுடெல்லி, ஏப்ரல் 10- ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜராத் டைட்​டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 211 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்​றிக்கு 13 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. அப்​போது அதிரடி வீரர்​களான விப்​ராஜ் நிகாம், டேவிட் மில்லர் ஜோடி களத்​தில் இருந்​தது. விப்​ராஜ் நிகாம் முதல் பந்தை பவுண்​டரி விரட்​டிய நிலை​யில் அடுத்த பந்​தில் எக்ஸ்​டிரா கவர் திசை​யில் ஷுப்​மன் கில்​லிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார். இதையடுத்து களமிறங்​கிய குல்​தீப் யாதவ் 3-வது பந்​தில் ஒரு ரன் எடுத்து டேவிட் மில்லரிடம் ஸ்ட்​ரைக் வழங்​கி​னார் 3 பந்​துகளில் 8 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் 4-வது பந்தை டேவிட் மில்​லர் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். இதனால் டெல்லி அணி எளி​தாக வெற்றி பெறும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. வெளியே அமர்ந்​திருந்த அந்த அணி​யின் வீரர்​களும் உற்​சாக​மாக இருந்​தனர்.
ஆனால் 5-வது பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசை​யில் அடித்த டேவிட் மில்​லர் சிங்​கிள் ரன் சேர்ப்​ப​தற்கு ஓடவில்​லை. இது​தான் டெல்லி அணி​யின் தலை​வி​தியை புரட்​டிப்​போட்​டது. கடைசி பந்​தில் 2 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் பிரசித் கிருஷ்ணா புத்​தி​சாலித்​தன​மாக வேகம் குறைந்த பவுன்​சரை வீசி​னார். இதை சற்​றும் எதிர்​பா​ராத டேவிட் மில்​லர் பந்தை தொட முடி​யாமல் தவற​விட்​டார்.
அதற்​குள் சிங்​கிள் ரன் சேர்க்க குல்​தீப் யாதவ் ஓடிவர விக்​கெட் கீப்​பர் ஜாஸ்​பட்​லர் விரைந்து செயல்​பட்டு அவரை ரன் அவுட் ஆக்​கி​னார்.
இந்த கடைசி பந்து அதிக உயர​மாக வீசப்​பட்​டது என கூறி டெல்லி அணி தரப்​பில் வைடு கேட்டு மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. ஆனால் 3-வது நடு​வர் இதை ஆய்வு செய்து வைடு இல்லை என அறி​வித்​தார். முடி​வில் டெல்லி அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 209 ரன்​கள் என ஆட்​டத்தை நிறைவு செய்து தோல்வி அடைந்​தது.தொடர்ச்​சி​யாக 2 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டிருந்த டெல்லி அணிக்கு இது முதல் தோல்​வி​யாக அமைந்​தது.
அதேவேளை​யில் முதல் 2 ஆட்​டங்​களி​லும் தோல்வி அடைந்த குஜ​ராத் அணி முதல் வெற்​றியை பதிவு செய்​தது. ஒரு​வேளை டேவிட் மில்​லர் 5-வது பந்​தில் ஒரு ரன் சேர்க்க ஓடி​யிருந்​தால் போட்டி ‘டை’​யில் முடிவடைந்து சூப்​பர் ஓவருக்கு செல்ல வாய்ப்பு இருந்​திருக்​கும். இதனால் டேவிட் மில்​லர் மீது கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.