
புதுடெல்லி: ஏப்ரல் 9-
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இடுக்கி நகரில் அவர் பேசுகையில், “கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள்,
அவர்கள் மிகவும் புத்திசாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி, பினராயி விஜயன் இருவரும் குஜராத்திலும் மற்ற இடங்களிலும் கல்வியறிவில்லாத மக்களை ஏமாற்றலாம். ஆனால் கேரள மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.
குஜராத் மக்கள் குறித்த கார்கேவின் இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் கேரளாவில் எனது தேர்தல் உரையில் கூறப்பட்ட சில கருத்துக்கள் வேண்டுமென்றே தவறாக திரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.


















