Home செய்திகள் தேசிய செய்திகள் கேரளாவில் மார்க்சிஸ்ட் – பாஜக ரகசிய கூட்டணி வெற்றி பெறாது: கே.சி.வேணுகோபால் விமர்சனம்

கேரளாவில் மார்க்சிஸ்ட் – பாஜக ரகசிய கூட்டணி வெற்றி பெறாது: கே.சி.வேணுகோபால் விமர்சனம்

கொச்சி, மார்ச் 23- வரும் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் மற்​றும் பாஜக இடையிலான ரகசி​யக் கூட்​டணி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் மூத்த தலை​வர் கே.சி.வேணுகோ​பால் தெரிவித்துள்ளார். கேரள சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்பு மனு தாக்​கல் இன்று முடிகிறது. இந்​நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோ​பால் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: மக்​களின் உணர்​வு​கள் தங்​களுக்கு எதி​ராக இருப்பதை ஆளும் மார்க்​சிஸ்ட் (சிபிஐ-எம்) தலை​மையி​லான இடது​ சாரி ஜனநாயக முன்​னணி (எல்​டிஎஃப்) நன்கு அறிந்​துள்​ளது, அதனால்​தான் அவர்​கள் தங்​களது கடைசி தந்​திரத்​தைப் பயன்படுத்​துகிறார்​கள். கேரளா​வில் சிபிஐ(எம்​)- ​பாஜக இடையே ரகசிய நட்பு உள்​ளது. இது ஒன்​றும் புதிதல்ல. மத்​திய அரசின் ‘பிஎம்​-ஸ்ரீ’ போன்ற திட்​டங்​கள் மற்​றும் மத்​திய அரசு மீதான இடது​ சா​ரிக் கட்​சிகளின் மென்​மையான அணுகுமுறை ஆகிய​வற்​றின் மூலம் இந்த ரகசிய உறவை அறிய முடிகிறது. முதலமைச்​சருக்கு எதி​ரான லாவ்​லின் வழக்கு தொடர்ந்து தள்​ளிப்​போடப்​படு​வதை நாம் பார்க்​கிறோம்.
அதேபோல், கேரளா​வில் மத்​திய முகமை​களின் விசா​ரணை வேகத்​தை​யும் நாம் கவனித்து வரு​கிறோம். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஒரு​வருக்​கொரு​வர் உதவிக்​கொள்ள சிபிஐ(எம்) மற்​றும் பாஜக வேட்​பாளர் பட்​டியலிலேயே ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்​ளனர். அவர்​களது சொந்​தக் கட்​சித் தொண்டர்களே இந்த ஒப்​பந்​தத்தை நிராகரிப்​பார்​கள் என்​ப​தில் நான் உறு​தி​யாக இருக்​கிறேன். ஏற்​கெனவே இப்​படி முயன்று அவர்​கள் அம்​பலப்​பட்​டார்​கள். இப்​போதும் அதேநிலை​தான் ஏற்படும். இந்த ரகசிய கூட்​டணி வெற்றி பெறாது. தற்​போதைய அரசின் குறை​களைச் சுட்​டிக்​காட்​டு​வதோடு, யுடிஎஃப் ஆட்​சி​யின் திட்​டங்​களை​யும் முன்​வைத்து வரு​கிறோம். கேரளா​வுக்​கான குறிப்​பிட்ட திட்​டங்​கள் அடங்​கிய விரி​வான தேர்தல் அறிக்கை விரை​வில் வெளி​யிடப்​படும். கேரளா​வில் காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎஃப்) ஆட்​சிக்கு வந்​தால், பெண்​கள் அரசுப் பேருந்​துகளில் இலவச​மாகப் பயணம் செய்​ய​லாம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.