Home செய்திகள் தேசிய செய்திகள் கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி

கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி

புதுடெல்லி: மார்ச் 21 –
கேரளாவில் மொத்​தம் 140 உறுப்​பினர்​களை கொண்ட சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. எதிர்க்​கட்​சிகளின் அணி​யான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் (யுடிஎப்) காங்​கிரஸ் 92 இடங்​களில் போட்​டி​யிடு​கிறது.
இந்​நிலை​யில் காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி தனது ‘எக்​ஸ்’ பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:
யுடிஎப் அணி​யின் ஒவ்​வொரு வேட்​பாள​ரும் கேரள மக்​களின் குரலை​யும், எதிர்​பார்ப்​பு​களை​யும் நம்​பிக்​கை​யை​யும் பிர​திபலிக்​கின்​றனர். என்​னைப் பொறுத்​தவரை, கேரளம் எனது இல்​லம். கேரள மக்​கள் எனது குடும்​பத்​தினர். அவர்​கள் என் மீது பொழிந்த அன்​புக்​கும், அரவணைப்​புக்​கும் நான் பெரிதும் கடமைப்​பட்​டுள்​ளேன். நான் எப்​போதும் உங்​களுக்கு துணை​யாக இருப்​பேன்.
கேரளத்​திலிருந்து வரும் செய்தி மிகத் தெளி​வானது. மக்​கள் மாற்​றத்​துக்கு தயா​ராக உள்​ளனர். தங்​களின் பிரச்​சினைக்கு செவி​சாய்க்​கும், அதற்கு நேர்​மை​யுடன் தீர்வு காணும் ஓர் அரசையே அவர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர்.
வரவிருக்​கும் யுடிஎப் அரசுடன் இணைந்​து, இந்த அழகிய மாநிலத்​துக்கு சிறந்த எதிர்​காலத்தை உரு​வாக்க என்​னால் இயன்ற அனைத்​தை​யும் நான் செய்​வேன். இவ்​வாறு அவர்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.