Home விளையாட்டு கொல்கத்தா அணி​யுடன் இணைகிறார் பதிரனா

கொல்கத்தா அணி​யுடன் இணைகிறார் பதிரனா

கொழும்பு, ஏப்ரல் 13- இலங்கை கிரிக்​கெட் அணி வீரர் மதீஷா பதிரனா, விரை​வில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருடன் ​(கேகேஆர்) இணை​ய​வுள்​ளார். ஐபிஎல் போட்​டிகளில் கேகேஆர் அணிக்​காக ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுக்​கப்​பட்​டார் மதீஷா பதிரனா. இந்​நிலை​யில், அவர் ஐபிஎல் போட்​டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்​கெட் வாரி​யம் ​(எஸ்எல்சி) ஆட்​சேபம் இல்​லாத சான்றிதழை (என்​ஓசி) வழங்​கவேண்​டிய நிலை இருந்​தது. இந்நிலை​யில் என்​ஓசி வழங்​கு​வதற்​கான கட்​டாய உடற்​தகு​திச் சோதனை​யில் பதிரனா வெற்றி பெற்​றுள்​ளார். இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்​கெட் வாரி​யம் அவருக்கு என்​ஓசி-யை வழங்​கி​யுள்​ளது. இதையடுத்து அவர் கேகேஆர் அணி​யினருடன் விரை​வில் இணை​வார் என்று கொல்​கத்தா அணி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. சென்​னை​யில் நாளை (ஏப்​ரல் 14) நடை​பெறவுள்ள சிஎஸ்​கேவுக்கு எதி​ரான போட்​டி​யில் அவர் களமிறங்​கு​வது கடினமே. அநேக​மாக அவர் வரும் 17-ம் தேதி அணியினருடன் இணை​வார் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக கேகேஆர் அணி வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.