Home விளையாட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? – குஜராத் டைட்டன்ஸ் உடன் இன்று பலப்​பரீட்சை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? – குஜராத் டைட்டன்ஸ் உடன் இன்று பலப்​பரீட்சை

அகம​தா​பாத், ஏப்ரல் 17- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜராத் டைட்​டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி​கள் மோதுகின்றன. அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் வெற்​றிக்​காக ஏங்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. ஒரு ஆட்​டம் மழை காரண​மாக ரத்து ஆகி​யிருந்​தது. இதனால் அந்த அணி ஒரு புள்​ளி​யுடன் 10 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள தொடரில் கடைசி இடத்​தில் உள்​ளது. அந்த அணி​யின் பந்​து​வீச்சு பலம் இழந்து காணப்​படு​கிறது. தொடர் தொடங்​கு​வதற்கு முன்பே ஹர்​ஷித் ராணா, ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரண​மாக வில​கினர். சில பிரச்​சினை​களால் பிசிசிஐ-​யின் உத்​தர​வின்​படி முஷ்​டாபிஷுர் ரஹ்​மானும் அணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டிருந்​தார். அவருக்கு பதிலாக அணி​யில் சேர்க்​கப்​பட்ட ஜிம்​பாப்​வேயை சேர்ந்த பிளெஸ்​ஸிங் முசா​ர​பானி​யிடம் இருந்து எதிர்​பார்த்த அளவி​லான செயல்​திறன் வெளிப்​பட​வில்​லை. அனுபவம் வாய்ந்த சுழற்​பந்து வீச்​சாளர்​களான சுனில் நரேன், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் ஃபார்​மில் இல்​லாதது கொல்​கத்தா அணி​யின் சுமையை இரட்​டிப்​பாக்கி உள்​ளது. சுனில் நரேன் நடப்பு தொடரில் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தி​னாலும் விக்​கெட்​கள் வீழ்த்த சிரமப்​பட்டு வரு​கிறார். இது​வரை அவர், 3 விக்கெட்​கள் மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ளார். அதேவேளை​யில் வருண் சக்​ர​வர்த்தி இன்​னும் விக்​கெட் வேட்​டையை தொடங்​க​வில்​லை. இது ஒரு​புறம் இருக்க மைதானத்​துக்கு உள்​ளே​யும் வெளி​யே​யும் எடுக்​கப்​பட்ட சில முடிவு​களால் கொல்​கத்தா அணி​யின் பிரச்​சினை​கள் மேலும் அதி​கரித்​துள்​ளன. டிம் ஷெய்​பர்ட், ரச்​சின் ரவீந்​திரா போன்ற வீரர்​களை விளை​யாடும் லெவனில் சேர்க்​காமல் புறக்​கணித்து வரு​வது அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளது. அதே​போல், டாஸ் வென்ற பிறகு அவர்​கள் எடுத்த முடிவு​களும் குழப்​பம் விளை​விப்​ப​தாகவே உள்​ளன. பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக மழை​யால் பாதிக்​கப்​பட்ட போட்​டி​யில், முதலில் பேட்​டிங் செய்ய ரஹானே எடுத்த முடிவு அனை​வரை​யும் ஆச்​சரியப்​படுத்​தி​யது. அதே​போல், சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யிலும் சில தவறான முடிவுகளை ரஹானே எடுத்திருந்தார். முன்​ன​தாக மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதி​ரான முதல் போட்​டி​யில் 220 ரன்​களைக் குவித்தும், அதனைத் தக்​க வைக்க முடி​யாமல் தோற்​றது அந்த அணி​யின் மோச​மான தொடக்​கத்​திற்கு அச்சாரமிட்டது. அதனைத் தொடர்ந்​து, சொந்த மண்​ணிலேயே சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 65 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சந்​தித்த படுதோல்​வி, அணி​யின் வீழ்ச்​சியை மேலும் தீவிரப்​படுத்​தி​யது. ஒட்​டுமொத்​த​மாக கொல்​கத்தா அணி சரி​யான திசை​யில் பயணிக்​காமலும் தெளி​வான இலக்கு இல்​லாமலும் காட்​சி​யளிக்​கிறது.