Home மாவட்டங்கள் பெங்களூர் கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்

கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்

சென்னை: மார்ச் 14-
வணிக சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில வணிக சிலிண்டரை 4200 ரூபாய் முதல் 5000 வரை விற்கிறார்கள். அவ்வளவு விலை கொடுத்து கடையை நடத்த முடியாது என்பதால், பல ஓட்டல்கள் செயல்படவில்லை. ஓட்டல்கள் செயல்படாமல் போனால் போதிய ‘ஆர்டர்’ கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கிடைக்காது. அப்படியான நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதுடன், விலையும் கடுமையாக சரிந்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக வணிக சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டரை நம்பியிருக்கும் ஓட்டல்களும் உணவை தயாரிக்க முடியாமல் கடைகளை அடுத்தடுத்து மூடி வருகின்றன. திறந்துள்ள ஒரு சில கடைகளுமே பதுக்கி வைக்கப்பட்டு 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சிலிண்டர்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுமே கேஸ் அதிகம் செலவாகும் உணவுகளை தயாரிப்பதை நிறுத்தி உள்ளனர். பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஹாஸ்டல்களும் உணவு தயாரிக்க முடியாத நிலையில் உள்ளன,
கோயம்பேடு காற்கறி விலை நிலவரம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) விவரம்:- பல்லாரி – ரூ.14 முதல் ரூ.22 வரை, தக்காளி – ரூ.8 முதல் ரூ.15 வரை, உருளைக்கிழங்கு – ரூ.10 முதல் ரூ.15 வரை, கேரட் – ரூ.12 முதல் ரூ.30 வரை, பீன்ஸ் – ரூ.30 முதல் ரூ.50 வரை, பீட்ரூட் – ரூ.15 முதல் ரூ.25 வரை, சௌசௌ – ரூ.13 முதல் ரூ.15 வரை, முட்டைக்கோஸ் – ரூ.8 முதல் ரூ.10 வரை, வெண்டைக்காய் – ரூ.25 முதல் ரூ.30 வரை, கத்தரிக்காய் – ரூ.15 முதல் ரூ.25 வரை, சுரைக்காய் – ரூ.10 முதல் ரூ.15 வரை, முருங்கைக்காய் – ரூ.30 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் – ரூ.20 வரை.