Home விளையாட்டு சஞ்சு சாம்சனால் முடியும்: கவுதம் கம்பீர் புகழாரம்

சஞ்சு சாம்சனால் முடியும்: கவுதம் கம்பீர் புகழாரம்

மும்பை, மார்ச் 16- சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி​னால், அவரால் ஆட்​டத்​தின் முதல் 6 ஓவர்​களி​லேயே போட்​டியை வென்று கொடுக்க முடி​யும் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரி​வித்​தார். கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இந்​திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்​பையைக் கைப்​பற்​றியது. 3-வது முறை​யாக டி20 உலகக் கோப்​பையை வென்று சாதனை படைத்​திருந்​தது. டி20 உலகக் கோப்​பை​யின் கடைசி 3 போட்​டிகளில் இந்​திய தொடக்க வீரர் சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி அரை சதங்​களை விளாசி​னார். முக்​கிய​மான போட்​டிகளில் சிறப்​பாக செயல்​பட்டு ரன்​கள் குவித்த சஞ்சு சாம்​சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், சஞ்சு சாம்​சனை, கவுதம் கம்​பீர் பாராட்​டிப் பேசி​யுள்​ளார். இது தொடர்​பாக ஜியோஹாட்​ஸ்​டாருக்கு அளித்த பேட்​டி​யில் கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: தொடக்க ஆட்​டக்​காரர் சஞ்சு சாம்​சன் மிக​வும் திறமை வாய்ந்​தவர். அதிரடி ஆட்​டத்​தால், ஆட்​டத்​தின் போக்​கையை மாற்​றக்​கூடிய​வர். சஞ்சு சாம்​ச​னால் என்ன செய்ய முடி​யும் என்​பது நமக்​குத் தெரி​யும். அவரது திறமை மீது ஒரு​போதும் எனக்கு எந்​த வொரு சந்​தேக​மும் இருந்​த​தில்​லை. அவர் அதிரடி​யாக விளை​யாடி​னால், அவரால் ஆட்​டத்​தின் முதல் 6 ஓவரிலேயே போட்​டியை வென்று கொடுக்க முடி​யும். அந்த அளவுக்கு அசாத்​திய திறமை​யை​யும், மன உறு​தி​யை​யும் படைத்​தவர் அவர். உடற்​ப​யிற்சி கூடத்​தில் நாங்​கள் இரு​வரும் ஒன்​றாக பயிற்சி மேற்​கொள்​வோம். அப்​போது, ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டி​யில் நீங்​கள் விளை​யாடு​கிறீர்​கள் என்​பதை சஞ்சு சாம்​சனிடம் கூறினேன். எங்​களுக்கு இடையே​யான உரை​யாடல் இவ்​வாறு​தான் இருக்​கும். டாப் ஆர்​டரில் மூன்று இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் இருக்​கிறார்​கள் என்​பது குறித்து நிறைய விமர்​சனங்​கள் இருந்​தது எனக்​குத் தெரி​யும். ஆனால், டாப் ஆர்​டரில் 3 இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் இருப்​ப​தால் அணி​யில் மாற்​றம் செய்​ய​வில்​லை. சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷானை தொடர்ந்து சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டி​யா, திலக் வர்​மா, ஷிவம் துபே, அக்​சர் படேல் என பேட்​டிங் வரிசை பலமாக இருப்​ப​தால் நமக்கு அதிக வாய்ப்பு இருந்​தது. அதிரடி​யாக விளை​யாடக் கூடிய பார்ட்​னர்​ஷிப் அமைய​வேண்​டும் என்​ப​தற்​காகவே டாப் ஆர்​டரில் மாற்​றம் செய்​தோம். முதல் 6 ஓவர்​களில் அதிரடி​யாக விளை​யாட வேண்​டும் என்​ப​தற்​காகவே சஞ்சு சாம்​சன் பிளே​யிங் லெவனில் சேர்க்​கப்​பட்​டார்.