
லக்னோ: ஜூலை 15.
“அன்று ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லாம் இன்று மத நம்பிக்கை பற்றிப் பேசுகிறார்கள்,” என்று ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
1990 அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 தேதிகளில் அயோத்தி இயக்கம் சார்பில் பாபர் மசூதி நோக்கி கரசேவர்கர்கள் மேற்கொண்ட பேரணியின்போது அவர்கள் மீது அப்போதைய சமாஜ்வாதி கட்சி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 17 பேர் உயிரிழந்தனர்.
அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் தற்போது ராமர் கோயில் காணிக்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளதை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இது குறித்துப் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் ராம பக்தர்களின் உணர்வை பாதித்துள்ளது. ஆனால், அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை ஒரு சுயாதீன அமைப்பு. அதன் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது
இல்லை. ஆனாலும் காணிக்கை திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தவுடனேயே நியாயமான நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டோம். காணிக்கை திருட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியவர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.














