
சென்னை: மார்ச் 27 –
தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராகப் பணியாற்றியவர் பொன்ராஜ்.
இவர், தவெக குறித்து பேசியிருக்கும் வீடியோவில் கட்சியின் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தவெக தலைவர் விஜய், டிஜிபி அலுவலகத்தில் நேற்றிரவு புகார் மனு அளித்தார்.
அதில் கூறி யிருப்பதாவது: திமுக-வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்பவர், ஒட்டுமொத்த பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
ஆளும் கட்சியான திமுக தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னையாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் அவர் எல்லை கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
பெண்களை மிக மோசமாக பேசி வரும் பொன்ராஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறிஉள்ளார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நடிகர் விஜய்கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக டிஜிபி அலுவலகம் வரை நேரடியாக வந்து புகார் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















