Home மாவட்டங்கள் பெங்களூர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

பெங்களூரு: ஜூலை 7- பெங்களூரு சதாசிவநகர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜு (வயது 20) என்ற அந்த மாணவி, காதல் விவகாரம் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பு தனது ஆண் நண்பருக்கு, “வாழ்க்கை வெறுத்துவிட்டது”
என அவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். இன்று அதிகாலை நடைப்பயிற்சி சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சதாசிவநகர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை பின்னணியில் காதல் விவகாரம் இருப்பதால் போலீசார் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி இத்தகைய முடிவு எடுக்க அவருக்கு யாராவது அழுத்தம் கொடுத்தனரா அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்