Home செய்திகள் தேசிய செய்திகள் சின்னஞ்சிறு நண்பனுடன் பிரதமர் மோடி

சின்னஞ்சிறு நண்பனுடன் பிரதமர் மோடி

புதுடெல்லி: மார்ச் 23-
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு புகைப்படத்தை இன்​ஸ்​டாகி​ராமில் வெளி​யிட்​டார். அவர் வெளியிட்ட பதி​வில், “எனது வீட்​டுக்கு வந்த சின்​னஞ்​சிறு நண்பனுடன்​…” என்று குறிப்​பிட்​டிருந்​தார். அந்த புகைப்​படம் வைரலாகப் பரவி வரு​கிறது.
பிரதமர் மோடியுடன் இருக்​கும் சின்​னஞ்​சிறு நண்​பன் யார் என்ற கேள்வி அனை​வரை​யும் துளைத்​தெடுத்​தது. நீண்ட தேடலுக்​குப் பிறகு அந்த சிறு​வன் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரும் பாஜக மூத்த தலை​வரு​மான கிருஷ்ணகு​மாரின் பேரன் நியோம் என்​பது தெரிய​வந்​துள்​ளது. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகு​மார் தனது குடும்​பத்​துடன் பிரதமர் மோடியை சந்​தித்​துப் பேசி​னார்.அப்​போது கிருஷ்ணகு​மாரின் மகள் தியா தனது மகன் நியோமுடன் பிரதமரை சந்​தித்​தார். குழந்​தைகள் மீது அதிக பாசம் கொண்ட பிரதமர் மோடி, நியோமை தூக்கி கொஞ்சி மகிழ்ந்​தார். அந்த புகைப்​படத்​தையே அவர் தனது வெளியிட்டிருக்கிறார். தியா​வும் அவரது கணவர் அஸ்​வினும் கேரளா​வின் பிரபல யூ டியூபர்​களாக உள்​ளனர்.தனது கர்ப்​பம் முதல் பிரசவம் வரையி​லான முழு பயணத்​தை​யும் யூ டியூப் சேனலில் தியா ஆவணப்​படுத்​தி​யிருக்​கிறார்.