
பெங்களூர்: பிப்ரவரி.6-
கர்நாடக மாநிலத்தில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை சமூக ஊடகம் பயன்படுத்த அரசு அதிரடி தடை விதித்து உள்ளது. முதல்வர் சித்தராமையா இன்று பட்ஜெட் தாக்கல் செய்த போது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் இதன் மூலம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தில் இனி பேஸ்புக் யூடியூப் வாட்ஸ் அப் போன்றவைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்த முதல்வர் சித்தராமையா, இந்த பட்ஜெட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளார்.
குழந்தைகள் மீது அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டின் பக்க விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
17வது பட்ஜெட்டை சாதனையாக முன்வைத்த அவர்,
மாநிலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குழந்தைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளைக் கேட்க குழந்தைகளுக்கு மொபைல் போன்கள் வழங்கப்பட்டால், அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவார்கள். குழந்தைகள் சமூக ஊடகங்களில் உள்நுழைந்து அதைப் பயன்படுத்துவார்கள்.

இருப்பினும், இப்போது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்நுழைவதற்கு முன்பு தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவு பெற்றோரிடமிருந்து பரவலான ஆதரவைப் பெற்று வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் குறுகிய வீடியோக்கள் மீதான அவர்களின் மோகம் காரணமாக குழந்தைகள் கல்வியை இழந்தனர். தற்போது அரசின் இந்த நடவடிக்கை பெற்றோருக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது. கல்வியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களும் அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர், இது குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
செல்போன் மூலம் சமூக ஊடகங்களை பார்க்க குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை வெறிகொண்டு அலைகிறார்கள். யூடியூப் பேஸ்புக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் மூழ்கி விடுகிறார்கள்.யார் சொன்ன எதைச் சொன்னாலும் அவர்கள் காது கேட்பதில்லை. எப்போதும் சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது அவர்கள் தங்களின் குழந்தை பருவத்தையே இழந்து விடுகிறார்கள் இப்படிப்பட்ட மாபெரும் கொடிய பாதிப்பில் இருந்து சிறுவர்களை குழந்தைகளை மீட்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கர்நாடக அரசு இந்த அதிரடி தடையை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது
















