சிறை கண்காணிப்பாளராக பெண் அதிகாரி நியமனம்

ஸ்ரீநகர்: மார்ச் 5-
ஸ்ரீநகர் மத்​திய சிறை​யின் கண்​காணிப்​பாள​ராக முதன்​முறை​யாக பெண் அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.
இது தொடர்​பாக கடந்த திங்​கட்​கிழமை மாலை வெளி​யான அரசு உத்​தர​வின்​படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்​வேறு சிறை​களுக்கு 4 அதி​காரி​கள் கண்​காணிப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். இவர்​களில் ஸ்ரீநகர் மத்​திய சிறைக்​கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதி​காரி சபா ஷாலுக்கு வழங்​கப்​பட்​டது.
சபா ஷால் இந்த நியமனத்​துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறை​கள் துறை தலைமை இயக்​குநர் அலு​வல​கத்​தில் பணி​யாளர் அதி​காரி​யாக பணியாற்றினார்.
ஜம்மு காஷ்மீர் சிறை​கள் துறை​யில் மக்​கள் தொடர்பு அதிகாரியாக​வும் அவர் பணி​யாற்​றி​யுள்​ளார். ஸ்ரீநகரில் வசதியான மக்​கள் வசிக்​கும் பிர் பாக் பகு​தி​யில் வசிக்​கும் சபா ஷால், சமூகப் பணி​யில் முதுகலைப் பட்​டம் பெற்​றுள்​ளார். கடந்த 2012ல் காஷ்மீர் அரசுப் பணி​கள் தேர்​வாணைய தேர்​வில் தேர்ச்சி பெற்​றார்.