Home செய்திகள் தேசிய செய்திகள் சீனா​வுக்​கு புண்ணாக்குஏற்​றுமதி 20 மடங்கு உயர்வு

சீனா​வுக்​கு புண்ணாக்குஏற்​றுமதி 20 மடங்கு உயர்வு

புது டெல்லி, மார்ச் 20- கடந்த 2025 ஏப்​ரல் முதல் 2026 பிப்​ர​வரி வரையி​லான 11 மாதத்​தில், இந்​தியா 7.79 லட்​சம் டன் புண்ணாக்கு​களை சீனா​வுக்கு ஏற்​றுமதி செய்​துள்​ளது. இதில் 7,71,435 டன் கடு​குப் புண்​ணாக்​கு, 7,581 டன் ஆமணக்குப் புண்​ணாக்கு ஆகும். கடந்த நிதி​யாண்டின் இதே காலத்​தில் வெறும் 38,240 டன்​களாக மட்​டுமே இருந்த புண்​ணாக்கு ஏற்​றுமதி இந்த ஆண்டு 20 மடங்கு அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து இந்​திய எண்​ணெய் உற்​பத்​தி​யாளர் சங்​கத்​தின் (எஸ்​இஏ) நிர்​வாக இயக்​குநர் பி.​வி.மேத்தா கூறிய​தாவது: ஐரோப்​பிய நாடு​களு​டன் ஒப்​பிடும்​போது இந்​தி​யா​வில் புண்​ணாக்கு விலை குறை​வாக இருந்​த​தால் சீனா அதிக அளவில் இறக்​குமதி செய்​துள்​ளது. குறிப்​பாக, ஒரு டன் இந்​தி​யக் கடு​குப் புண்​ணாக்கு சுமார் 225 அமெரிக்க டாலர் விலையில் கிடைக்​கிறது. இது ஐரோப்​பிய சந்தை விலை​யான 297 டாலரை விடக் குறைவு ஆகும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இதற்​கிடையே, நடப்பு நிதி​யாண்​டின் முதல் 11 மாதங்​களில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த புண்​ணாக்கு ஏற்​றுமதி 11 சதவீதம் சரிந்து 34,93,823 டன்​களாக உள்​ளது. கடந்த நிதி​யாண்​டின் இதே காலத்​தில்​ இது 39,33,349 டன்​களாக இருந்​தது குறிப்பிடத்தக்கது.