Home செய்திகள் தேசிய செய்திகள் சீஷெல்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு காஞ்சி பட்டுப் புடவை, பூத்துக்குளி சால்வை

சீஷெல்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு காஞ்சி பட்டுப் புடவை, பூத்துக்குளி சால்வை

புதுடெல்லி: ஜூலை 1-
இந்​திய பெருங்​கடலில் அமைந்​துள்ள சீஷெல்ஸ் தீவு நாட்​டின் 50-வது தேசிய தினம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். அப்​போது அந்த நாட்​டின் அதிபர் பாட்ரிக் ஹெர்மினி உள்​ளிட்ட தலை​வர்​களை அவர் சந்​தித்​துப் பேசி​னார்.
சீஷெல்ஸ் தீவு ஆமை​களின் புகலிட​மாக விளங்​கு​கிறது. இதை நினை​வு​கூரும் வகை​யில் உத்தர பிரதேசத்​தின் மொரா​தா​பாத் நகரில் தயாரிக்​கப்​பட்ட வெண்கல ஆமையை சீஷெல்ஸ் அதிபர் பாட்​ரிக் ஹெர்​மினிக்கு பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.
அதிபரின் மனைவி வெரோனிகியூவுக்கு மத்​திய பிரதேசத்​தில் தயாரிக்​கப்​பட்ட மகேஸ்​வரி பட்டு சால்​வை, கர்​நாட​கா​வின் பீதரில் தயாரிக்​கப்​பட்ட பிட்​ரிவேர் பெட்டி ஆகிய​வற்றை அவர் பரி​சாக அளித்​தார்.
சீஷெல்ஸ் நாட்​டின் துணை அதிபரும் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்தவருமான செபாஸ்​டியன் பிள்​ளைக்கு சிக்கிமின் புகழ்​பெற்ற ஆர்​சிட் ஓவி​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி பரி​சாக வழங்​கி​னார். துணை அதிபரின் மனைவி லீனா பிள்​ளைக்கு காஞ்​சிபுரம் பட்​டுப்​புட​வையை அவர் பரி​சாக அளித்தார்.
மேலும் நீல​கிரி தோடர்​கள் தயாரித்த பூத்​துக்​குளி சால்​வையை சீஷெல்ஸ் நாடாளு​மன்ற சபா​நாயகர் அசா​ரெல் எர்னெஸ்டாவுக்கு பிரதமர் நரேந்​திர மோடி பரி​சாக வழங்​கி​னார். இந்​தி​யா​வுக்​கும் தீவு நாடான சீஷெல்​ஸுக்​கும் மிக நெருங்​கிய நட்புறவு நீடிக்​கிறது. அந்த நாட்​டின் மக்​கள் தொகை​யில் 11% பேர் இந்​திய வம்​சாவளி​யினர் ஆவர். இதில் பெரும்​பாலானோர் தமிழர்கள் ஆவர்.சீஷெல்ஸ் நாட்​டுக்கு இந்​தி​யர்​கள் விசா இல்​லாமல் செல்​லலாம்.
அந்த நாட்​டில் தரை​யிறங்​கியதும் அவர்​களுக்கு சிறப்பு விசா வழங்​கப்​படு​கிறது. சுமார் 150 தீவு​களை கொண்ட சீஷெல்ஸ் நாட்டுக்கு 6 அதிநவீன ரேடார்​களை இந்​தியா வழங்கி உள்​ளது. வர்த்​தகம், பாது​காப்​பில் இந்​தி​யா​வின்​ மிக நெருங்​கிய நட்​பு நாடாக சீஷெல்​ஸ்​ ​விளங்​குகிறது.