Home செய்திகள் தேசிய செய்திகள் சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா

சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா

புதுடெல்லி, ஏப்ரல் 4- மேற்கு வங்​கத்​தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்​.பி.​யாக இருப்​பவர் மஹுவா மொய்த்​ரா. மாநிலத்​தில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் துடிப்​பான எம்​.பி.​யாக இருக்​கிறார். இவரது பேச்​சுகள் நாடாளு​மன்​றத்​தின் உள்​ளே​யும் வெளி​யே​யும் சர்ச்​சைகளை ஏற்​படுத்​தி​யதுண்​டு. சமீபத்​தில் மஹுவா மொய்த்ரா செய்​தி​யாளர்​களிடம் பேசும் போது, ‘‘சுதந்​திரப் போராட்​டத்​தில் வங்​காள மக்​களின் பங்​களிப்​போடு ஒப்​பிடு​கை​யில், குஜ​ராத் மக்​களின் பங்​களிப்பு எத்​தகையது? ‘காலா​பானி’ (அந்​த​மான் சிறை) தண்​டனை பெற்​றவர்​களில் எத்​தனை பேர் குஜ​ராத்​தி​கள்​?’’ என்று கேள்வி எழுப்​பி​னார். இதனால் முதல்​வர் மம்தாவுக்கு நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. மேற்கு வங்க தேர்​தலில் பவானிபூர் தொகு​தி​யில் மம்தா போட்​டி​யிடு​கிறார். இந்​தத் தொகு​தி​யில் பெங்​காலி பேசும் மக்களை விட குஜ​ராத்​தி​கள் மற்​றும் மார்​வாரிகள்​தான் அதி​கம். இ​தனால் மஹுவா பேச்சால் முதல்​வர் மம்தா கோபம் அடைந்​துள்ளார். பவானிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி​யில் 2-வது முறை போட்​டி​யிட்டு வெற்றி பெறும் நோக்​கில் தேர்​தலில் மம்தா களமிறங்கி உள்​ளார். இந்​நிலை​யில், சொந்​தக் கட்சி எம்​.பி. மஹு​வா​வின் பேச்சு எந்த மாதிரி​யான தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்ற கோபத்​தில் இருக்​கிறார் மம்​தா. பவானிப்​பூர் மக்​கள் தொகை​யில் சுமார் 40 சதவீதம் பேர் குஜ​ராத்​தி​கள், மார்​வாரி​கள் மற்​றும் பிஹாரி​கள். இந்​நிலை​யில், மஹு​வா​வின் பேச்​சால் பாதிப்பு ஏற்​படு​வதைத் தடுக்க குஜ​ராத்தி மற்​றும் மார்​வாரி மக்​களு​டன் நட்​புடன் பழகி அவர்​களின் நம்​பிக்​கை​யைப் பெற வேண்​டும் என்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களை மம்தா கேட்​டுக்​கொண்​டுள்​ளார். கடந்த 2022-ம் ஆண்​டு, ‘காளி தேவி மாமிசம் உண்​பவர்’ மற்​றும் ‘மது அருந்​துபவர்’ என்று மஹுவா பேசி​னார். 2023-ம் ஆண்டு நாடாளு​மன்​றத்​தில் கேள்வி​களை எழுப்​புவதற்​​காகப்​ பணம்​ மற்​றும்​ பரிசுகளைப்​ பெற்​றுக்​ கொண்​ட குற்​றச்​​சாட்​டில்​ அவரது எம்​.பி. பதவி பறிக்​கப்​பட்​டது.