Home விளையாட்டு சேப்பாக்கத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி!

சேப்பாக்கத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி!

சென்னை, ஏப்ரல் 4- ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே, பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதி​யது. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக அமைந்தது. சஞ்சு சாம்​சன் 7 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் சேவியர் பார்ட்​லெட் பந்​தில் விக்​கெட் கீப்​பர் பிரப்​சிம்​ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்ரே மட்​டையை சுழற்​றி​னார். சேவியர் பார்ட்​லெட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்​டரி​கள் விரட்​டி​னார். அதிரடி​யாக விளை​யாடிய ஆயுஷ் மாத்ரே 29 பந்​துகளில், சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசி​னார். ஆயுஷ் மாத்ரே அதிரடி​யால் சிஎஸ்கே அணி 10 ஓவர்​களில் 101 ரன்களை குவித்​தது. மறு​புறம் நிதான​மாக விளை​யாடிய ருது​ராஜ் கெய்க்​வாட் 22 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலையில் யுவேந்​திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்​கி​னார். சிறப்​பாக பேட் செய்து வந்த ஆயுஷ் மாத்ரே 43 பந்​துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்த நிலையில் விஜயகு​மார் வைஷாக் பந்​தில் ஷார்ட் தேர்டுமேன் திசை​யில் நின்ற யுவேந்​திர சாஹலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.இதன் பின்​னர் களமிறங்​கிய கார்த்​திக் சர்மா 1 ரன்​னில் மார்கோ யான்​சன் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்டமிழந்து ஏமாற்​றம் அளித்​தார். இதையடுத்து களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான் தாக்​குதல் ஆட்​டம் மேற்கொண்​டார். அர்​ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரில் சர்ஃப​ராஸ் கான் 3 பவுண்​டரி​களை விளாசி​னார்.