Home செய்திகள் தேசிய செய்திகள் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: மார்ச் 25 –
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவர்கள் சோனியா காந்தியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும், அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. டெல்லியில் கிளைமேட் மாற்றம் காரணமாக சோனியா காந்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இரு முறை பதவி வகித்தவர் சோனியா காந்தி. இந்த நிலையில் இன்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நலம் விசாரித்த ராகுல், பிரியங்கா சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்த ராகுல் காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.