Home விளையாட்டு ஜஸ்பிரீத் பும்ரா நாட்​டின் பொக்கிஷம்: கேப்​டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு

ஜஸ்பிரீத் பும்ரா நாட்​டின் பொக்கிஷம்: கேப்​டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு

அகம​தா​பாத், மார்ச் 10- இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்​டின் பொக்கிஷம் என்று கேப்​டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நியூஸிலாந்து அணியை 96 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி, சூர்​யகு​மார் யாதவ் தலைமையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்​பையை 3-வது முறை​யாக வென்ற முதல் அணி என்ற சாதனையை​யும், சொந்த மண்ணில் கோப்​பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை​யும் இந்​திய அணி படைத்​தது. இந்​திய அணியின் வெற்​றிக்கு பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன் (89), அபிஷேக் சர்மா (52), இஷான் கிஷன் (54) ஆகியோர் சிறந்த பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தனர். இவர்​களது அதிரடி​யால் இந்​திய அணி 255 ரன்​களை குவித்திருந்​தது. இதே​போன்று பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி 15 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். அவருக்கு உறு​துணை​யாக செயல்​பட்ட அக்​சர் படேல் 3 விக்கெட்களை கைப்​பற்​றி​யிருந்​தார். வெற்​றிக்கு பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​ட​னான சூர்யகு​மார் யாதவ் கூறிய​தாவது: ஜஸ்​பிரீத் பும்ரா, தலைமுறைக்கு ஒரு​முறை உரு​வாகும் அபூர்​வ​மான பந்துவீச்​சாளர். அவரை நமது நாட்​டின் பொக்​கிஷம் என்​று தான் கூற வேண்​டும். தனக்​குக் கொடுக்​கப்​பட்ட வேலையை எப்​படிச் செய்ய வேண்​டும் என்று அவருக்கு நன்​றாகத் தெரி​யும். வெற்றி உணர்​வில் இருந்து வெளியே வர எனக்கு சிறிது நேரம் ஆகும். ஆனால் நான் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்ளேன். இது ஒரு நீண்ட பயணம். 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பைக்​குப் பிறகு தான் இது தொடங்​கியது. ஜெய் ஷா, ரோஹித் சர்மா ஆகியோர் என்னை நம்​பி, அணியை வழிநடத்த வாய்ப்பு கொடுத்​தார்​கள்.