
பெங்களூரு: மார்ச் 10-
வார்டு இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.5 நகராட்சி நிறுவனங்களின் வார்டு வாரியாக திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,
மொத்தம் 88,92,528 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலுக்கு மார்ச் 16 வரை ஆட்சேபனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. திருத்தச் செயல்முறை முடிந்ததும், இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிடப்படும்.
மொத்த நகராட்சிகள் 5
மொத்த வார்டுகள் 369
வாக்காளர்கள் 88,92,528
ஆண் வாக்காளர்கள் 45,69,752
பெண் வாக்காளர்கள் 43,21,143
மற்ற வாக்காளர்கள் 1,635
பெங்களூரு மத்திய: 63 வார்டுகள் 14,25,483 வாக்காளர்கள்
பெங்களூரு வடக்கு:
72 வார்டுகள் 19,54,206 வாக்காளர்கள்
பெங்களூரு தெற்கு: 72 வார்டுகள்
17,44,270 வாக்காளர்கள்
பெங்களூரு கிழக்கு: 50 வார்டுகள்
10,41,738 வாக்காளர்கள்
பெங்களூரு மேற்கு: 112 வார்டுகள் 27,25,714 வாக்காளர்கள் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது
















