Home செய்திகள் தேசிய செய்திகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய உச்சம்: 2,264 கோடி முறை யுபிஐ பணப் பரிமாற்றம்

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய உச்சம்: 2,264 கோடி முறை யுபிஐ பணப் பரிமாற்றம்

புதுடெல்லி: ​ஏப்ரல் 3-
நாட்​டின் டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை தளமான யுபிஐ மூலம் கடந்த மார்ச் மாதத்​தில் 2,264 கோடி முறை பரிவர்த்தனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்​தனை புதிய வரலாற்று உச்​சத்​தைத் தொட்டு சாதனை படைத்​துள்​ளது.
இது தொடர்​பாக மத்​திய நிதி அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படும் நிதிச் சேவை​கள் துறை தனது எக்ஸ் தளத்​தில், “மார்ச் மாதத்​தில் யுபிஐ வாயி​லாக மேற்​கொள்​ளப்​பட்ட பரிவர்த்​தனை​களின் எண்ணிக்கை 2,264 கோடியை எட்​டி​யுள்​ளது. இதன் மதிப்பு ரூ.29.53 லட்சம் கோடியாகும். டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களை ஏற்​றுக்​கொண்​டு, இந்த புரட்​சியை முன்​னெடுத்​துச் செல்​லும் இந்​திய மக்களுக்கு நன்​றி. நமது பணப் பரிவர்த்தனை முறையை மாற்றியமைக்​கும் இந்​தப் பயணம் தொடரட்​டும்” என்று தெரிவித்துள்​ளது.கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்​தில் 1,830 கோடி பரிவர்த்தனைகள் நடை​பெற்​றிருந்த நிலை​யில், இந்த ஆண்டு அது 24 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி மாதத்தில் 2,039 கோடி​யாக இருந்த பரிவர்த்​தனை​கள், தற்​போது மார்ச் மாதத்​தில் கணிச​மாக உயர்ந்​துள்​ளன.ரிசர்வ் வங்​கி​யின் இரு​முனைப் பாது​காப்பு விதி​முறை​களைப் பின்​பற்​றி, எளிய மற்​றும் பாது​காப்​பான முறை​யில் யுபிஐ செயல்படு​கிறது. இதில் வங்​கிக் கணக்​குடன் இணைக்​கப்​பட்ட மொபைல் எண் மற்​றும் ரகசிய பின் எண் ஆகிய இரு அடுக்கு பாது​காப்பு வசதி​கள் உள்​ள​தால் விரை​வாக​வும் பாது​காப்​பாக​வும் பணத்​தைப் பரி​மாற்ற முடிகிறது. தற்​போது இந்​தி​யா​வின் ஒட்டுமொத்த டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களில் 85 சதவீதத்தை யுபிஐ பிடித்​துள்​ளது.தேசிய அளவைத் தாண்டி சர்​வ​தேச அளவிலும் யுபிஐ தனது முத்திரையைப் பதித்து வரு​கிறது. யுஏஇ, சிங்​கப்​பூர், பூடான், நேபாளம், இலங்​கை, பிரான்ஸ் மற்​றும் மொரிஷியஸ் ஆகிய ஏழு நாடு​களில் தற்​போது நமது யுபிஐ சேவை நடை​முறை​யில் உள்ளது. ஐரோப்​பிய நாடு​களில் முதல் நா​டாக பிரான்​ஸில் யுபிஐ அறிமுகப்படுத்​தப்​பட்​டது ஒரு முக்​கிய மைல்​ கல்​லாக பார்க்கப்படுகிறது.