Home விளையாட்டு டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணியை வீழ்த்தியது ஐசிஎஃப்!

டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணியை வீழ்த்தியது ஐசிஎஃப்!

சென்னை, மார்ச் 13- சென்னை கால்​பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது.
இதில் நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் ஐசிஎஃப் – டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம் அணி​கள் மோதின.
இந்த ஆட்​டத்​தில் ஐசிஎஃப் அணி 2-0 என்ற கால் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி சார்​பில் 28-வது நிமிடத்​தில் ஸ்ரீகுட்​ட​னும், 64-வது நிமிடத்​தில் நரேஷும் கோல் அடித்து அசத்​தினர். சிறந்த வீர​ராக ஐசிஎஃப் அணி​யின் ஆல்​பின் வால்​டர் தேர்​வா​னார்​.