Home செய்திகள் உலக செய்திகள் டிரம்ப்பால் ஈரானுக்கு கொட்டும் பணம் – தினமும் எண்ணெய் வருமானம் இவ்வளவா

டிரம்ப்பால் ஈரானுக்கு கொட்டும் பணம் – தினமும் எண்ணெய் வருமானம் இவ்வளவா

தெஹ்ரான், மார்ச் 27- பொதுவாக வரலாற்றி திரும்பி பார்த்தால், போரில் சிக்கும் நாடுகள் பொருளாதார ரீதியாக சிதைந்து போயிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய போரால், பாதிப்புகளை ஈரான் சந்தித்தாலும் ஈரானின் எண்ணெய் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் ஒரே முக்கிய ஏற்றுமதியாளராக ஈரான் இருப்பதால், அதன் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஈரான் தினமும் எண்ணெய் ஏற்றுமதி மூலமாக மட்டும் 1310 கோடி வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் எடுத்த முடிவு ஈரானுக்கு சாதமாகவும், இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு பாதகமாகவும் முடிந்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குமே பாதகமாக மாறி உள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் வளைகுடா நாடுகளில் முடங்கி உள்ளது. ஈரான் அனுமதி அதேநேரம் அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர, இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத்தான் எண்ணெய் கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்கிறது. அதுவும் சில நாட்களாகத்தான் அனுமதிக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.இதனால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஈரான் நன்றாக சம்பாதிக்கிறது. பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு $115 மில்லியனாக இருந்த ஈரானின் எண்ணெய் வருமானம், மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு $139 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் 1310 கோடி தினமும் ஈரான் எண்ணெய் விற்று சம்பாதித்து வருகிறது. தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $100-ஐத் தாண்டியுள்ளது. ஈரான் தனது எண்ணெயை சீனா போன்ற நட்புநாடுகளுக்கு மிகக் குறைந்த தள்ளுபடியில் (பேரலுக்கு $2.10 மட்டுமே தள்ளுபடி) விற்பனை செய்கிறது.