Home விளையாட்டு டி20 உலகக் கோப்​பை​யில் ஒவ்வொருஅணி​களும் பெற்ற பரிசுத் தொகை எவ்​வளவு?

டி20 உலகக் கோப்​பை​யில் ஒவ்வொருஅணி​களும் பெற்ற பரிசுத் தொகை எவ்​வளவு?

துபாய், மார்ச் 12- சமீபத்​தில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்​பை தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்திருந்​தது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 96 ரன்கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இருந்​தது. இந்​நிலை​யில் 24 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடரில் ஒவ்​வொரு அணிக்​கும் வழங்​கப்​பட்ட பரிசுத் தொகையை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணிக்கு சுமார் ரூ.25 கோடி வழங்கப்​பட்​டுள்​ளது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணிக்கு சமார் ரூ.13 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது. அரை இறு​தி​யில் தோல்வி அடைந்த தென் ஆப்​பிரிக்​கா, இங்​கிலாந்து அணி​களுக்கு முறையே ரூ.9.24 கோடி, ரூ.8.96 கோடி கிடைத்​துள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு ரூ.4.95 கோடி​யும், பாகிஸ்​தான் அணிக்கு ரூ.4.81 கோடி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. ஜிம்​பாப்வே அணி ரூ.4.52 கோடியை​யும், இலங்கை அணி ரூ.4.38 கோடியை​யும் பெற்​றுள்​ளன. ஆஸ்​திரேலி​யா லீக் சுற்​றுடன் வெளி​யேறிய ஆப்​கானிஸ்​தான், ஆஸ்​திரேலி​யா, அமெரிக்கா ஆகிய அணி​கள் தலா ரூ.2.85 கோடியை பரி​சாக பெற்​றுள்​ளன.