Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை

டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை

புதுடெல்லி: ஏப்ரல் 2-
ஈ​ரான் – அமெரிக்க, இஸ்​ரேல் போரால் மேற்​காசி​யா​வில் பதற்​றம் தொடரும் நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கவுன்​சில் (சிசிஎஸ்) ஆலோ​சனை நடத்​தி​யது. ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை சமாளிக்க எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்து இந்​தக் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.
அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரானுக்கு எதி​ராக கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போரைத் தொடங்​கின. இந்​தப் போரில் ஈரான் நாட்​டின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய தலை​வர்​கள் உயி​ரிழந்​தனர்.
இதையடுத்​து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்​கத் தொடங்​கியது. வளை​குடா நாடு​களில் அமைந்​துள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் கடும் தாக்​குதலை நடத்​தி​யது. கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக போர் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறி​வைத்து ஈரான் தாக்​குதல்​களை நடத்​து​வ​தால் கச்சா எண்​ணெய்யை மற்ற நாடு​களுக்கு அனுப்​புவ​தில் கடும் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. மேலும், எண்​ணெய் கப்​பல்​கள் செல்​லும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முற்​றி​லும் முடக்​கி​யுள்​ளது. இதனால், சர்​வ​தேச அளவில் எரிபொருள் தட்​டுப்​பாடு அதி​கரித்​துள்​ளது.
இந்​நிலை​யில், பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் நடை​பெற்​றது. டெல்​லி​யில் பிரதமரின் அதி​காரப்​பூர்வ அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.
மேலும், பொருளா​தா​ரம் மற்​றும் உள்​கட்​டமைப்​புத் துறை​களைக் கையாளும் பல மூத்த அமைச்​சர்​களும் இந்த கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். மேற்​காசி​யா​வில் தொடரும் போர், அதனால் இந்​தி​யா​வில் ஏற்​பட்​டுள்ள தாக்​கங்​கள், நாடு சந்​தித்து வரும் பிரச்​சினை​கள், அதற்​கான தீர்​வு​கள் உள்​ளிட்​டவை குறித்து இந்​தக் கூட்​டத்​தில் அமைச்​சர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.