Home விளையாட்டு டெல்லி அணி வெற்றியால் சிஎஸ்கே-க்கு அடித்த ஜாக்பாட்!

டெல்லி அணி வெற்றியால் சிஎஸ்கே-க்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை, மே 12- எம். எஸ் தோனி இல்லாமலேயே இந்த முறை பிளே ஆஃப்க்கு சென்னை அணி சென்றுவிடும் என ரசிகர்கள் நம்பி வருகிறார்கள். நேற்று நடந்த போட்டியிலும் மாஸ் வெற்றி பெற்ற சென்னை அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 5 வது இடத்திற்கு முன்னேறியது. இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றதன் மூலமாக சென்னை அணிக்கு கூடுதல் பூஸ்ட் கிடைத்துள்ளது. அதாவது பஞ்சாப் அணி தோற்று இருப்பது சென்னை அணிக்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிஎஸ்கே அணி சிறப்பாகவே ஆடி வருகிறது என்று சொன்னாலும் சில சமயங்களில் அப்படியே தலைகீழாக மாறி விடுகின்றது என ரசிகர்கள் ஆரம்பத்தில் புலம்ப ஆரம்பித்தனர். எனினும் கடைசி இரண்டு போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக ஆடியது. மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரே சீசனில் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் நேற்று நடந்த லக்னோ அணியுடனான போட்டியிலும் சென்னை அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதாவது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. உர்வில் படேல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் அபார ஆட்டமே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, சென்னை அணியின் இந்த வெற்றிகரமான பயணம் பிளேஆஃப் வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தற்போது சென்னை அணி 11 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொதுவாக, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற ஒரு அணிக்கு 16 புள்ளிகள் தேவைப்படும். எனவே எஞ்சிய மூன்று ஆட்டங்களில் சென்னை அணி நான்கு புள்ளிகள் பெற்றால், அதாவது 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப்க்கு தகுதி பெறும். எனவே அடுத்த 3 போட்டிகளில் கண்டிப்பாக இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.