தகாத உறவில் ஈடுபட்ட ஜோடிக்கு 140 கசையடி

ஜகார்த்தா: பிப்ரவரி 2-
இந்தோனேஷியா நாட்டின் ஆச்சே மாகாணத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியடைய் வைத்துள்ளது.. முறைதகாத உறவுக்காக 140 கசையடி தந்துள்ளதால், பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார் ஒரு பெண்.. என்ன நடந்தது? இந்தோனேசியா உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு. அந்த நாட்டின் ஆச்சே (Aceh) மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, அதன் தலைநகரான பன்டா ஏஸ் பகுதியில் இச்சட்டம் மிகத் தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. அங்கு விபசாரம், கள்ளத்தொடர்பு, மது அருந்துதல் மற்றும் சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, ஷரியா சட்டத்தின்படி பொது இடத்தில் சாட்டையடி போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்தோனேஷியா பவர்ஃபுல் தண்டனை இந்த தண்டனை பொதுமக்களின்
முன்னிலையில் வழங்கப்படுவதன் மூலம் சமூக ஒழுக்கத்தை பேண முடியும் என்று அங்குள்ள அதிகாரிகள் நம்புகிறார்கள்.. மனித உரிமை அமைப்புகள் இதை எதிர்த்தாலும், அந்த மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தின் காரணமாக இந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. இது ஒரு மத ரீதியான தண்டனையாகவும், தவறு செய்பவர்களுக்குச் சமூக ரீதியான அவமானத்தை ஏற்படுத்தி மற்றவர்களை எச்சரிக்கவும் பொது இடங்களில் நிறைவேற்றப்படுகிறது. சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் இதற்குப் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அந்த மாகாணத்தின் தனிச்சலுகை மற்றும் கலாச்சாரக் காவலாக இது இன்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண் கசையடி சமீபத்தில்கூட இப்படியொரு தண்டனை தரப்பட்டது.. திருமணமான பெண் ஒருவர், வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக் கொண்ட காரணத்திற்காக அங்குள்ள மசூதி ஒன்றின் முன்பு அப்பெண்ணிற்கு சுமார் 26 கசையடிகள் வழங்கப்பட்டது. அந்த பெண்ணை அழைத்து வந்த போலீசார், மசூதி முன்பு முழங்காலிட்டு உட்கார வைத்தனர். இதனை பார்க்க அங்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அப்போது அங்கு வந்த கருப்பு நிற நீண்ட அங்கி அணிந்த நபர் ஒருவர் அப்பெண்ணுக்கு கசையடி வழங்கி தண்டனையை நிறைவேற்றினார்.

அதேபோல அவருடன் உறவு வைத்திருந்த நபருக்கும் கசையடி தண்டனையும் வழங்கப்பட்டது. மனித உரிமை மீறல் கசையடி கொடுப்பது என்பது மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இது “சித்திரவதை மற்றும் கொடூரமான தண்டனைக்கு” சமமானது என்று ஐநா தொடர்ந்து சொல்லி வருகிறது.. அச்சே மாகாணத்தில் நடக்கும் இந்த கசையடி தண்டனைகள் அந்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக ஐநா கண்டனங்களை பதிவு செய்தவாறே உள்ளது..