Home மாவட்டங்கள் பெங்களூர் தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஜாமீன்

பெங்களூரு: ஏப்ரல் 24 –
கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த ஆண்டு மார்ச்​சில் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் நடத்திய சோதனை​யில் ரூ.2.8 கோடி தங்​கம், ரூ.2.4 கோடி ரொக்கம் சிக்​கியது.
வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவர் மீது தங்​கக் கடத்​தல், அந்​நிய செலா​வணி மோசடி உட்பட 5 பிரிவு​களில் வழக்குப் பதிவு செய்​தனர். காபி​போசா வழக்​கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. அந்த தண்​டனை காலம் நேற்​று​ முன்​தினத்​துடன் நிறைவடைந்​தது.
தங்​கக் கடத்​தல் வழக்​கில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து ரன்யா ராவ் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்தார். அவரது ஜாமீன் மனுவை விசா​ரித்த நீதிபதி விஸ்​வ நாத் கவுடர், ரன்யா சிறை​யில் அடைக்​கப்​பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலை​யில் நேற்று நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்தர​விட்​டார். நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதை அடுத்து சிறை​யில் இருந்து ரன்யா ராவ்​ வெளியே வந்​தார்​.