Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழகத்தில் வெளுக்க போகும் மழைதென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் வெளுக்க போகும் மழைதென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: மார்ச் 30 –
தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் சென்றாலே அனல் தகித்து வியர்வை கொட்டுகிறது. வீட்டில் இருந்தாலும் வெப்பத்தினால் வியர்வை கொட்டி வருகிறது. இந்த சூழலில் தான் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 30-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 3 ஆம் தேதி வரை மழை தான் 01-04-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
30-03-2026 முதல் 01-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறையக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்”என்று கூறப்பட்டுள்ளது.