தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்

சென்னை: பிப்ரவரி 16-
தமிழக அரசின் 2026 – 2027 ஆம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட், சட்​டசபை​யில் நாளை தாக்​கல் செய்​யப்​படு​கிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்​டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்​டம் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்​கியது. ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளி​யேறி​னார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு வாசித்​தார். உரையை ஆளுநர் வாசித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்​னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 24ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலுரை ஆற்றினார். இதையடுத்​து, மறு ​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. தமிழகத்​தில் விரைவில் சட்​டசபை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், தமிழக பட்​ஜெட் தாக்​கல் குறித்த கேள்வி​கள் எழுந்த நிலை​யில் கடந்த 8 ஆம் தேதி சட்​டப்​பேரவை தலை​வர் அப்​பாவு கூறும்போது, தமிழக சட்​டப்​பேரவை கூட்டத்​தொடர் வரும் 17 ஆம் தேதி காலை 9.30 மணிக்​கு, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள சட்​டசபை மண்​டபத்​தில் கூடு​கிறது எனத் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட் அன்று 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தாக்​கல் செய்​கிறார். பிப்ரவரி 20 ஆம் தேதி 2026-27 ஆம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26 ஆம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன.
சட்​டப்​பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்று 17 ஆம் தேதி நடை​பெறும் அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​படும். பேரவை நிகழ்வுகள் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படு​கின்​றன. உலகெங்​கிலும் இருந்து யார் வேண்​டு​மா​னாலும் இணை​யதளம் மூலம் பார்க்க முடி​யும். அமைச்​சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்​கைகள், சிறப்பு தீர்​மானங்​கள் போன்​றவை நேரலை செய்​யப்​படு​கின்​றன. விவாதங்​களை முழு​மை​யாக நேரலை செய்​வது குறித்து அலு​வல் ஆய்​வுக் குழு முடிவு செய்​யும் என்று தெரி​வித்​தார். முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு நாளை பிப்​ரவரி 17 ஆம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டம் பிப்​ரவரி 20-ம் தேதி வரை நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெற வாய்ப்புள்​ளது. தமிழக அரசின் பட்​ஜெட் ஆண்​டு​தோறும் பிப்​ர​வரி அல்லது மார் மாதம் தாக்​கல் செய்​வது வழக்​கம். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்​ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்​களில் தனித்தனியாக தாக்​கல் செய்து வரு​கிறது. தமிழகத்​தில் விரைவில் சட்​டசபை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் தாக்​கல் செய்ய முடி​யும். பின்​னர்​, ஆட்​சி அமைக்​கும்​ கட்​சி பட்​ஜெட்​டை ​தாக்​கல்​ செய்​யும்​ என்​பது குறிப்பிடத்​தக்​கது.