Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழக பிஜேபி நிர்வாகிகளுடன்பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

தமிழக பிஜேபி நிர்வாகிகளுடன்பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

சென்னை: ஏப்ரல் 4-
சென்​னைக்கு 2 நாள் பயண​மாக வந்​துள்ள பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினார்.
தமிழகம் மற்​றும் புதுச்​சேரி உள்​ளிட்ட 5 மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் மாதம் தேர்​தல் தேதியை அறி​வித்​ததைத் தொடர்ந்​து, தமிழகத்​தில் வரும் 23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. வேட்​புமனுத் தாக்​கல் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரும் நிலை​யில், அரசி​யல் களம் இப்​போதே உச்​சகட்​டப் பிரச்​சா​ரத்​தால் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது.
புதுச்​சேரி​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாகப் பிரச்​சா​ரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்​தார். அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி சென்ற அவர், அங்கு நடை​பெற்ற பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்​றார். பிரச்​சா​ரத்தை முடித்​துக்​கொண்டு நேற்​றிரவு மீண்​டும் சென்னை திரும்​பிய அவரை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ் கோயல், எல்​.​முரு​கன் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் வரவேற்​றனர். விமான நிலை​யத்​தில் இருந்து கார் மூலம் கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர விடு​திக்​குச் சென்ற பிரதமர் மோடி, கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களை சந்தித்தார். அப்போது சில முக்​கிய அம்​சங்​கள் விவா​திக்​கப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. தமிழகத்​தில் பாஜக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் வெற்றி வாய்ப்​பு​கள் மற்​றும் கள நில​வரம் குறித்து அப்​போது அவர் கேட்​டறிந்​தார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி​யள​வில் நடைபெறும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்​தில் அடுத்​தகட்​டப் பிரச்​சா​ரத்தை பிரம்​மாண்ட பொதுக்​கூட்​ட​மாக நடத்​து​வதா அல்​லது மக்​களு​டன் நேரடி​யாக உரை​யாடும் வகை​யில் ‘ரோடு ஷோ’ ஆக நடத்​து​வதா என்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​ப​ட உள்ளது. மேலும் ஏப்.15-ம் தேதியன்று கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய தேர்​தல் வியூ​கங்​கள் குறித்​தும் அப்போது விரி​வாக விவா​திக்​கப்​ப​ட உள்ளது.