
இஸ்லாமாபாத், மார்ச் 23- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் எனக் கெஞ்சும் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி! கடந்தாண்டு மே மாதம் இந்தியாவில் மிகக் கொடூரமான பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிப் போடுவதாக இந்த தாக்குதல் இருந்தது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது. தண்ணீர் பஞ்சம் சிந்து நதி நீரையே பெருமளவு நம்பி இருந்த பாகிஸ்தானுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாக்குதலை நிறுத்திய பாகிஸ்தான்,
அப்போது முதலே சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையே தண்ணீர் வேண்டும் என்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (IWT) இந்தியா உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கெஞ்சியிருக்கிறார். பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்த கருத்துகளைத் தெரிவித்தார். கெஞ்சும் பாகிஸ்தான் இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “நீர் ஆதாரங்களை ஆயுதமாக்குவது கவலையளிக்கிறது. இந்தியாவின் இந்த முடிவு, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த சர்வதேச ஒப்பந்தத்தின் சாராம்சத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருக்கிறது. இது பொருளாதார பாதுகாப்பை அச்சுறுத்துவதுடன், இந்த தண்ணீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

















