
கொல்கத்தா: மார்ச் 16-
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு எந்த கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய சர்வே வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் திரிணாமுல் வெல்லவே வாய்ப்பு அதிகம் என்றாலும் கூட மம்தா- என்டிஏ இடையே போட்டி மிக கடுமையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. திரிணாமுல் வெல்லும் மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் தெரிகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் திரிணாமுல் கட்சிக்குச் சற்று முன்னிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திரிணாமுல் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றாலும் கடந்த முறையைப் போலப் பிரம்மாண்ட வெற்றிக்கு எல்லாம் சாத்தியம் இல்லை. போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் மிக குறைந்த வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால் வாக்குப்பதிவு வரையிலும் கூட அங்குப் போட்டிக்குப் பஞ்சமே இருக்காது. கடும் போட்டி மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் சர்வேபடி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 155-170 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக கூட்டணி 100-115 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 5-7 இடங்களில் வெற்றி பெறும் என மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக இந்த நம்பரை வைத்துப் பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸுக்கு சாதகமான சூழலே இருப்பது போலத் தெரிகிறது.
இருப்பினும், போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன. பல தொகுதிகளில் பாஜக தனது இருப்பைத் தக்க வைத்துள்ளதால், கடந்த தேர்தல்களை விட இந்த முறை மம்தாவுக்கு சவால் அதிகமாகவே இருக்கும்.


















