திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

காரைக்கால், பிப். 12- திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது. இக்​கோயி​லில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசை​யாக நடத்​தப்​படு​வது வழக்​கம். இதில் பங்​கேற்க நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கோயிலுக்கு வரு​வார்​கள்.மார்ச் 6-ம் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசி​யில் இருந்து மீன ராசிக்கு சனிபக​வான் பிர​வேசிக்​கிறார். இந்​நிலை​யில், சனிப்பெயர்ச்சி விழாவுக்​கான பந்​தல்​கால் முகூர்த்​தம் நேற்று நடை​பெற்​றது. இதையொட்​டி, தர்​பாரண்​யேஸ்​வரர் கோயி​லில் கொடி மரத்து விநாயகர் மற்​றும் பந்​தல்​கால்​களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்​தப்​பட்​டு, மகா தீபா​ராதனை காட்​டப்​பட்​டது. பின்​னர், மங்கல வாத்​தி​யங்​கள் முழங்க, பந்​தல்​கால்​கள் பிர​கார உலா​வாகக் கொண்டு வரப்​பட்டு கோயில் உள்​பிர​காரத்​தில் பைர​வர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் அரு​கில் நடப்​பட்​டன. இதில், தரு​மபுரம் ஆதீன கட்​டளை விசா​ரணை ஸ்ரீமத் சட்​ட​நாத தம்​பி​ரான் சுவாமிகள், புதுச்​சேரி நியமன எம்​எல்ஏ ஜி.என்​.எஸ்​.​ராஜசேகரன், கோயில் நிர்​வாக அதி​காரி ஆர்​.சுப்​பிரமணி​யன் மற்​றும் தர்​பாரண்​யேஸ்​வரர் தேவஸ்​தானத்​துக்​குச் சொந்​த​மான 5 கிராமங்​களைச் சேர்ந்த பொது​மக்​கள், பக்​தர்​கள் பலர் கலந்​துகொண்​டனர்​.