Home பக்தி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு

திருப்பதி: ஏப்ரல் 6
ஏழுமலையான் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை சாதாரண ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்பட்டபோது, போலி அட்டைகளை வைத்து சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தடுக்க, இனி ‘ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரச் சரிபார்ப்பு’ (Aadhaar-based Face Recognition) முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் சரிபார்ப்பு முறைக்காக ஆந்திர அரசுடன் இணைந்து தேவஸ்தானம் செயல்படுகிறது. இதற்காக பதிவுக் கட்டணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம். ஒவ்வொரு ஆதார் சரிபார்ப்புக்கு 4 பைசா. e-KYC சரிபார்ப்புக்கு ₹3.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத விசேஷங்கள் மற்றும் உற்சவங்கள் ஏப்ரல் மாதம் திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துணை ஆலயங்களில் நடைபெறவுள்ள முக்கிய விழாக்களை பார்க்கலாம். திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலயத்தில், ஏப்ரல் 10, 17, 24 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம். ஏப்ரல் 11 மாலை 6:45 மணிக்கு கஜ வாகனத்தில் தாயார் வீதியுலா. ஏப்ரல் 30 முதல் மே 2 வரை வசந்தோற்சவம் நடைபெறும்; ஏப்ரல் 28 கோயிலாழ்வார் திருமஞ்சனம், ஏப்ரல் 29 அங்குரார்ப்பணம்.
திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனித்து, தங்கள் தரிசனத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.