திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை

மதுரை: மார்ச் 5-
நீ​தி​மன்​றம் தெரிவிக்​கும் 5 பேர் குழு​வுக்கு பதில் கோயில் குருக்​களை பூஜை செய்ய அனு​ம​திக்​கலாம் என திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் அரசு தரப்​பில் யோசனை தெரிவிக்கப்​பட்​டது. திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கின் நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன.
மதுரை மாநகர காவல் ஆணை​யர், காவல் துணை ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர், அறங்​காவலர் குழு​வினர் ஆஜராகினர். அறங்​காவலர் குழு தரப்​பில், நீதி​மன்​றம் தெரிவிக்​கும் 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனு​ம​திப்​பது தொடர்​பாக ஆலோ​சித்து வருவதாக தெரிவிக்கப்​பட்​டது.
காவல்​துறை சார்​பில், நீதி​மன்​றம் தெரிவிக்​கும் புதிய நடை​முறையை செயல்​படுத்த போதிய அவகாசம் தேவை எனக் கூறப் பட்​டது. அறங்​காவலர் குழு தரப்பில் 2 வார அவகாசம் கோரப்​பட்​டது.
பின்​னர் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்​ததாதற்கு அறங்​காவலர் குழுவினரையும் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் சேர்க்​கலாமா என நீதிபதி கேள்வி எழுப்​பி​னார். அரசு தரப்​பில், இந்த அவம​திப்பு வழக்கு விசாரணைக்கே உகந்​ததல்ல.
இந்த ஆண்டு கார்த்திகை திரு​விழா​வின்போது தீபத்​தூணிலும் தீபம் ஏற்ற வேண்​டும் என பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வில் தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு வழக்​கில் 2 நீதிப​தி​கள் அமர்வு ஒரு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.
அடுத்த ஆண்​டும் தீபம் ஏற்​றப்​பட ​வில்லை என்​றால் மட்​டுமே இந்த நீதி​மன்ற அவம​திப்பு வழக்கை விசா​ரிக்க முடி​யும். 2 நீதிப​தி​கள் அமர்வு ஒவ்​வொரு கார்த்​தி​கை​ திரு​விழா​வின் போதும் தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.
தனி நீதிபதி இந்த ஆண்டு தீபத்​தூணில் ஏற்ற வேண்​டும் எனக் கூறி​யுள்​ளார். தனி நீதிப​தி​யின் உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு மாற்றி உள்ள நிலை​யில், இந்த நீதி​மன்ற அவம​திப்பு விசா​ரணைக்கு உகந்​ததல்ல என்​றனர்.
தொடர்ந்து நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை மதிக்​கும் அடை​யாள​மாக தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​படும் என்​ப​தன் முன்​னெடுப்​பாகவே நீதி​மன்​றம் கூறும் 5 பேரை பூஜை செய்ய அனு​ம​திப்​பது குறித்து முடி​வெடுக்க கூறினேன் என்​றார்.
அதற்கு அரசுத் தரப்பில், நீதி​மன்​றம் கூறு​வதை ஆகம விதி​யின்​படி செய்​ய​லாமா என்​பதை முடிவு செய்ய அறங்​காவலர் குழு​வின் ஆலோ​சனை மற்​றும் துறை​யின் ஒப்​புதல் தேவை. எனவே அவகாசம் வழங்க வேண்​டும்.
அறங்​காவலர் குழு​வினரை அவம​திப்பு வழக்​கில் சேர்க்க வேண்​டாம் என வாதிடப்​பட்​டது. நீதிப​தி, தீபம் ஏற்​று​வது குறித்து முடி​வெடுப்​பது குறித்து ஆலோ​சிக்​கட்​டும். பூஜை செய்ய அனு​ம​திக்​கலாமே என்​றார்.
அதற்கு அரசுத் தரப்​பில், இது மதநம்​பிக்கை என்​ப​தால், முந்​தைய உத்​தர​வைப் போல கோயில் குருக்​கள் சென்று பூஜை செய்​யக்கூறலாமே என தெரிவிக்​கப்​பட்​டது. இதற்கு ஆடேசபம் தெரி​வித்த பிர​தான மனு​தா​ரர்​ தரப்​பு, அரசு காரணம் கூறி தப்​பிக்​கிறது.
அரசின் பெயரை காப்​பாற்ற வாதங்​களை முன்​வைக்​கின் றனர். எனவே கால அவசாகம் வழங்​கக் கூடாது என்​றனர். அதற்கு நீதிப​தி, எப்​படிப் பார்த்​தா​லும் அரசு நம்முடைய அரசு. தீபம் ஏற்றுவது தொடர்பாக பழைய அறங்காவலர் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டது.