Home செய்திகள் தேசிய செய்திகள் தீவிரவாதப் பட்டியலில் பாகிஸ்தான்

தீவிரவாதப் பட்டியலில் பாகிஸ்தான்

புதுடெல்லி: ஜூலை 1-
பணமோசடி தடுப்பு மற்​றும் தீவிர​வாத நிதி​யுதவி தடுப்பு (ஏஎம்​எல்​/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வரு​கிறது.
இந்த கண்​காணிப்பு அமைப்​பின் நிதி நடவடிக்கை பணிக்​குழு (எப்​ஏடிஎப்) கூட்​டம் வரும் அக்​டோபரில் நடை​பெற உள்​ளது. இதில், தீவிர​வாதத்தை ஊக்​குவிக்​கும் நாடு​களை ‘சாம்​பல் பட்​டியலில்’ (Grey List) சேர்ப்​பது மற்​றும் ஏற்​கெனவே இப்​பட்​டியலில் உள்ள நாடு​களை அவற்​றின் செயல்​பாட்​டின் அடிப்​படை​யில் விடுவிப்பது குறித்து முடிவு செய்​யப்​படும்.
தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்தான் ஏற்​கெனவே சாம்பல் பட்​டியலில் இடம்​பெற்​றிருந்​தது. எனினும், கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் பாகிஸ்தான் ‘சாம்​பல் பட்​டியலில்’ இருந்து நீக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானை மீண்​டும் ‘சாம்​பல் பட்​டியலில்’ கொண்​டுவர இந்​தியா முயன்று வரு​கிறது.
இதன்படி, அக்​டோபர் மாதம் நடை​பெறவுள்ள எப்​ஏடிஎப் கூட்​டத்​தில் தீவிரவாத அமைப்​பு​களுக்கு பாகிஸ்​தான் தொடர்ந்து ஆதரவளித்து வரு​வதற்​கான வீடியோ மற்​றும் இதர ஆதாரங்களை சமர்ப்​பிக்க இந்​தியா திட்​ட​மிட்​டுள்​ளது.