துபாய் மாலில் யுஏஇ அதிபர், இளவரசர் உலா

துபாய்: மார்ச் 4-
மத்​திய கிழக்கு நாடு​களில் போர் மேகங்​கள் சூழ்ந்​துள்ள நிலை​யில், ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்​யான் மற்​றும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்​தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்​தூம் ஆகியோர் துபாய் மாலில் பொது​மக்​களு​டன் இயல்​பாக உலா வந்த காட்சி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது.
இதைப்​பார்த்த நெட்​டிசன்​கள் பதற்​ற​மான சூழலிலும் தன்​னம்​பிக்​கை​யின் வெளிப்​பா​டாக இந்த காட்சி அமைந்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளனர். ஈரான் ஏவிய ஏராள​மான ட்ரோன்​கள் மற்​றும் வான்​வழித் தாக்​குதல்​களைத் தடுத்து நிறுத்​தி​ய​தாக அமீரக அரசு உறு​திப்​படுத்​திய சில மணி நேரங்​களி​லேயே இந்த நிகழ்வு நடந்​துள்​ளது.
வளை​குடா பிராந்​தி​யத்​தில் போர் பதற்​றம் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்ள போதி​லும், துபாய் மாலில் சுற்​றுலாப் பயணி​களும் பொது​மக்​களும் வழக்​கம் போலக் கூடி​யிருந்​தனர்.அப்​போது அங்​கிருந்த மக்​களு​டன் அதிபரும் இளவரசரும் கலந்​துரை​யாடினர்.
இணை​யதளங்​களில் வைரலாகி வரும் வீடியோ​வில், அதிபர் ஷேக் முகமது ஒரு சிறுமியை அரு​கில் அழைத்​து, குனிந்து அவளது கையில் முத்​தமிட்டு அன்பை வெளிப்​படுத்​தும் நெகிழ்ச்​சி​யான காட்சி இடம்​பெற்​றுள்​ளது.