Home மாவட்டங்கள் பெங்களூர் துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை

துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை

சென்னை: ஏப்ரல் 24-
சென்னை ஆழ்​வார்​பேட்டை வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அவரது மனைவி துர்கா ஸ்டா​லினிடம் பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன் நலம் விசா​ரித்​தார்.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்​டி, தமிழகம் முழு​வதும் வாக்​குப்​ப​திவு விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. ஆழ்​வார்ப்​பேட்​டை, எஸ்​ஐஇடி கல்​லூரி​யில், தமிழக முதல்​வர் ஸ்​டா​லின், மனைவி துர்கா ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநி​தி, அவருடைய மனைவி கிருத்​தி​கா, மகன் இன்​பநிதி ஆகியோர் வருகை தந்​தனர். வரிசை​யில் நின்று அவர்​கள் அனை​வரும் தங்​களது வாக்​கினை பதிவு செய்​தனர்.
அதன் பின்​னர், வெளியே வந்த தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் துர்கா ஸ்டா​லினை பாஜக வேட்​பாள​ரும், தெலுங்​கானா ஆளுநர​மான தமிழிசை சவுந்​தர​ராஜன் நேருக்குநேர் சந்​தித்​தார். அப்​போது, தமிழிசை சவுந்​தர​ராஜன், “அண்​ணன் வணக்​கம்” என்​றார். இதையடுத்​து, “நல​மாக இருக்​கிறீங்​களா” என்று முதல்​வர் நலம் விசா​ரித்​தார். தொடர்ந்​து, ‘‘வாழ்த்​துக்​கள்” என முதல்​வர் தெரி​வித்​தார். தொடர்ந்​து, துர்கா ஸ்டா​லினிடம் தமிழிசை சவுந்​தர​ராஜன் நலம் விசா​ரித்​தார்.
தேர்​தல் களம் மற்​றும் அரசி​யல் போட்​டிகளைத் தாண்​டி, மிகுந்த மரி​யாதை​யுடன் முதல்​வர் ஸ்டா​லினிடம், அவரது மனைவி துர்கா ஸ்டா​லினிடம் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசா​ரித்த, அரசி​யல் நாகரி​கம் அங்​கிருந்​தவர்​கள​யும், பொது​மக்​களை​யும் வெகுவாக கவர்ந்தது.