Home மாவட்டங்கள் பெங்களூர் தொகுதிப் பங்கீடு ஆலோசனை

தொகுதிப் பங்கீடு ஆலோசனை

சென்னை : மார்ச் 20 –
டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று சந்​தித்து தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் கட்​சிகளுக்கு ஒதுக்க வேண்​டிய தொகு​தி​கள் எண்​ணிக்கை குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் தொகு​திப்பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.
இதைத் தொடர்ந்​து, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோ​ரும் இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. திமுக கூட்​ட​ணி​யில் கட்​சிகள் உடனான தொகு​திப் பங்​கீடு இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. ஆனால், முதல் நபராக பிரச்​சா​ரத்தை தொடங்​கி,தேர்​தல் அறி​விப்​புக்கு முன்​ன​தாகவே 3 கட்​ட​மாக வாக்​குறு​தி​களை​யும் அறி​வித்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிதொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தையை தொடங்​காமலே இருந்​தார்.
அதி​முக​வில் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் தொகு​திப் பங்​கீடு குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன், தலைமை நிலை​யச் செய​லா​ளர் எஸ்​.பி.வேலுமணி, மகளிர்அணி செய​லா​ளர் பா.வளர்​மதி ஆகிய 4 பேர் கொண்ட குழுவை பழனி​சாமி அமைத்​தார். அதற்​குப் பிறகு எந்த முன்​னேற்​ற​மும் இல்​லை.
ஏற்​கெனவே மதுரை​யில் மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயலுடன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யிலும், டெல்​லி​யில் இம்​மாதம் முதல் வாரத்​தில் அமித் ஷாவை சந்​தித்​த​போதும் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு ஒதுக்க வேண்​டிய தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து உத்​தேச​மாக மட்​டுமே விவா​திக்​கப்​பட்​டது. ‘பாஜக, அமமுக அதிக தொகு​தி​கள் கேட்​கின்​றன.
அதன் காரண​மாகவே, தொகு​திப் பங்​கீட்டை பழனி​சாமி இறுதி செய்​யாமல் உள்​ளார். வேட்​புமனு தாக்​கலுக்கு இன்​னும் நாட்​கள் இருப்​ப​தால் அவசரம் காட்​டா​மல் இருக்​கிறார்’ என்​றும் கூறப்​பட்​டது.இந்​நிலை​யில், வேட்​புமனு தாக்​கல் 30-ம் தேதி தொடங்க உள்​ளது. அதற்கு இன்​னும் 10 நாட்​களே இருப்​ப​தால், கடைசி நேர அவசரத்தை தவிர்க்​கும் வித​மாக,தொகு​திப் பங்​கீட்டை விரைந்து இறுதி செய்ய வேண்​டும் என்று பழனி​சாமி​யிடம் பாஜக தலைமை வலி​யுறுத்​தி​யுள்​ளது.