Home பக்தி நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா

நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா

சென்னை: மார்ச் 31 –
மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர்.
சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பங்​குனிப் பெரு​விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அதி​கார நந்​தி, வெள்ளி ரிஷப வாக​னம் என தின​மும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.
கடந்த 29-ம் தேதி தேரோட்​டம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், விழா​வின் 8-ம் நாளான நேற்று அறு​பத்து மூவர் விழா பக்​திப் பரவசத்​துடன் நடை​பெற்​றது. விழா​வின் தொடக்​க​மாக, மதி​யம் 3.30 மணி அளவில் திரு​ஞானசம்​பந்​தர் எழுந்​தருளி, எலும்பை பூம்​பாவை​யாக்​கிய அற்​புத நிகழ்ச்சி நடை​பெற்​றது.
இதைத் தொடர்ந்​து, அலங்​கரிக்​கப்​பட்ட வெள்​ளிச் சப்​பரத்​தில் கபாலீஸ்​வரர் எழுந்​தருள, அவரைத் தொடர்ந்து 63 நாயன்​மார்​களும் தனித்​தனி சப்​பரங்​களில் வீதி உலா வந்​தனர். விநாயகர் முன்னே செல்ல, கற்​ப​காம்​பாள் உடனுறை கபாலீஸ்​வரர், முரு​கப் பெரு​மான், சண்​டிகேஸ்​வரர், முண்​டகக்​கண்ணி அம்​மன், அங்​காள பரமேஸ்​வரி மற்​றும் வீரபத்​திரர் அணிவகுத்து வந்​தனர்.
கடைசி​யாக, மயிலை காவல் தெய்​வ​மான கோல​விழி​யம்​மன் வீதி உலா​வுடன் விழா நிறைவு பெற்​றது. மாட​வீ​தி​களில் அறு​பத்து மூவர் வீதி உலா வரும் காட்​சி​யைக் காண பிற்​பகலில் இருந்தே சென்னை மட்​டுமின்றி தமிழகத்​தின் பல்​வேறு ஊர்​களில் இருந்​தும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்த வண்​ணம் இருந்​தனர். மயி​லாப்​பூர் மட்​டுமின்றி சுற்​றி​யுள்ள அனைத்து பகு​தி​களி​லும் தன்​னார்​வலர்​கள், தொண்டு நிறு​வனத்​தினர் ஆங்​காங்கே பந்​தல் அமைத்து பக்​தர்​களுக்கு அன்​ன​தானம், நீர்​மோர், பானகம், குளிர்​பானங்​கள் வழங்​கினர்.
ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணியை மேற்​கொண்​டனர். கோயிலைச் சுற்றி சிசிடிவி கேம​ராக்​கள், கண்​காணிப்பு கோபுரங்​கள் அமைத்து போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர். பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான திருக்​கல்​யாணம் நாளை (ஏப்​.1) இரவு 8.30 மணிக்கு நடை​பெற உள்​ளது.