Home செய்திகள் உலக செய்திகள் நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை

நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11 –
மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான் குழுவினரும் இஸ்லாமாபாத் வந்தனர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலின் முக்கிய நிலைகளை குறிவைத்தும், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் இந்த போர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு கடந்த 8-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.

ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. எனினும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியதால் அதிருப்தி அடைந்த ஈரான் பேச்சவார்த்தையில் பங்கேற்க இயலாது என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திவைக்குமாறு ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றது. இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஈரான் முன்வந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். இதேபோல், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான குழுவினரும் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். இரு தரப்பினரையும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர், நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவை ஏமாற்ற ஈரான் செய்யும் எந்த ஒரு முயற்சிக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். முன்னதாக, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்ச திட்டத்தை நிபந்தனையாக முன்வைத்தது. பதிலுக்கு ஈரானும் 10 அம்ச திட்டத்தை அமெரிக்காவுக்கு நிபந்தனையாக முன்வைத்தது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலை​யில், இரு தரப்​பினரும் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் இன்று நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தலை​மையி​லான குழு​வினர் பாகிஸ்​தான் விரைந்​துள்​ளனர். ஈரான் தரப்​பில் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.
அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி தற்​காலிக போர்​நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. இதன் தொடர்ச்​சி​யாக, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை இன்று நடை​பெறுகிறது.
இதில் அமெரிக்கா தரப்​பில் துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோ​ரும், ஈரான் தரப்​பில் அந்த நாட்டு நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, வெளி​யுறவு துணை அமைச்​சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோ​ரும் பங்​கேற்​கின்​றனர். சமரச தூதர்​களாக பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவு அமைச்​சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்​ளனர்.ட்ரம்ப் எச்சரிக்கை: ‘நியூ​யார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில், “ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை முடிவு​கள் அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் தெரிய​வரும். எங்​களு​டன் ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யா​விட்​டால், ஈரானுக்கு மோச​மான விளைவு​கள் ஏற்​படும். எங்​களது போர்க் கப்​பல்​களில் அதிநவீன ஆயுதங்​களை ஏற்றி வரு​கிறோம். ஒப்​பந்​தம் ஏற்​ப​டா​விட்​டால் அந்த ஆயுதங்​களை பயன்​படுத்​து​வோம்’’ என்று தெரி​வித்​தார்.