Home செய்திகள் தேசிய செய்திகள் நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இளைஞர் படை

நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இளைஞர் படை

காத்மண்டு: மார்ச் 6-
நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த ஜென் Z போராட்டத்திற்குப் பிறகு, நேற்றைய தினம் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே அங்கு இப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு கட்சிகளும் களத்தில் இருப்பதால் யார் வெல்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் கடந்தாண்டு இளம் தலைமுறை (Gen Z) போராட்டங்கள் வெடித்தன. சமூக வலைத்தள தடைக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் மிகப் பெரிதாக வெடித்தது. இதனால் அப்போது இருந்த கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று வியாழக்கிழமை அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குப்பதிவு பதிவானது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. 46 தொகுதிகளுக்கான ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி, புதிதாக உருவான ராஷ்ட்ரிய சுவத்ந்திரா கட்சி (RSP) ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நேபாள காங்கிரஸ் 5, CPN (UML) 3, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன. முன்னாள் ராப்பரும், காத்மாண்டு மேயருமான பலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரிய சுவத்ந்திரா கட்சிக்கு (RSP) சாதகமான சூழல் நிலவுகிறது. இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ராஷ்டிரிய ஸ்வதந்திரா கட்சிக்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறது.. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவம் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.